
மன்னார் வளைகுடாவில் 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று!: ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதற்கு தடைராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் உள்ளிட்ட மீன்பி டி துறைமுகத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் தொழிலுக்கு செல்கின்றனர் இந்நிலையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மணிக்கு 50 முதல் 60 கீ. மீ வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது.
இதனால் மீன்பிடி அனுமதி சீட்டை ரத்து செய்ததோடு மீனவர்கள் கடலுக்குள் தொழிலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத் தியுள்ளனர். மீன்பிடி துறைமுகங்களில் ஆயிரத்திற்கும் மேற் பட்ட விசை படகுகளை நங்கூரமிட்டு மீனவர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். 1 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்