

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுனைனா மற்றும் கீர்த்தனா என்ற திருநங்கைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில்கடந்த 15 நாட்களாக உக்கிர காளியம்மன் கோவில் சாலையில் தரைக் கடை வைத்து சுய தொழில் செய்து வருகிறேன். எனக்கு அரசாங்கத்தில் இருந்தோ அலுவலகத்தில் இருந்தோ எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. எனக்கு கடை வைத்து வாழ சில அடிப்படை உதவிகள் தேவை எனவே மாவட்ட ஆட்சியர் உதவி செய்து தர வேண்டும்.எனக் கூறி மனு அளித்தனர்.இதுகுறித்து திருநங்கைகள் கூறுகையில்..,தரைக்கடைகள் வைத்து சுயதொழில் செய்து வருகிறோம். அங்கு வரும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் எங்களை சுய தொழில் செய்யவிடாமல் தடுக்கின்றனர்.பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கைகளை சுயதொழில் செய்ய வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்துகிறது. ஆனால் சுய தொழில் செய்து வரும் எங்களைப் போன்ற திருநங்கைகளை ஊக்குவிக்காமல் தொழிலே செய்ய விடாமல் தடுப்பது மன வேதனை அடைய செய்கிறது. பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து விட்டோம் எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் தீ குளிக்க உள்ளோம் இல்லையென்றால் எங்களை கருணை கொலை செய்து விடுங்கள் என வேதனையுடன் கூறினார்.எங்களை சுயதொழில் செய்ய விடுங்கள் அல்லது பாலியல் தொழில் செய்வதற்கு அடையாள அட்டையை வழங்கிடுங்கள் என கூறினர்.