
கடந்த 23.07.2023- ம் தேதி இரவு வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து வள்ளியூர், பூங்கா நகரைச் சேர்ந்த முத்துராஜா என்பவரின் ஹரி என்ற 4 மாத கைக்குழந்தையை யாரோ கடத்தி சென்று விட்டதாக அவரது மனைவி ஜோதிகா வடசேரி காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் 24.07.2023- ம் தேதி காலை 09.00 மணியளவில் வடசேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குழந்தை கடத்தல் வழக்கு என்பதால் வழக்கின் முக்கியத்துவம் கருதி கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.என். ஹரி கிரன் பிரசாத் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் . நவீன் குமார் மேற்பார்வையில் வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் . திருமுருகன் தலைமையிலான தனிப்படையினர் CCTV காட்சிகளின் அடிப்படையிலும், சாட்சிகளை விசாரித்து விசாரணை மேற்கொண்டனர் இதில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் சேர்ந்து குழந்தையை கடத்திச் சென்றது தெரிய வந்தது. மேலும் அவர்கள் கோட்டார் ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலமாக கேரளாவிற்கு சென்றது தெரிய வந்தது. பின்பு உடனடியாக தனிப்படையினர் கேரளா சென்று குற்றவாளிகளை கேரளா மாநில காவல் துறையினர் உதவியுடன் சிறையின் கீழ் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் குமரி மாவட்டம் வட்டக்கோட்டை பகுதியை சேர்ந்த எதிரிகள் நாராயணன் வயது 55, மற்றும் அவரது மனைவியான சாந்தி வயது 50 என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் கணவன் மனைவியை கைது செய்து கடத்தப்பட்ட குழந்தையை மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வடசேரி காவல் நிலையத்தில் வைத்து குழந்தையின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையை மீட்க சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.