கவிதாலயா நாட்டிய பள்ளி நாட்டிய கலைமாமணிகள் சகோதரிகள் குரு கவிதா  மற்றும் குரு நிஷா  அவர்களிடம் பயின்ற 13 மாணவிகள் அரங்கேற்றம் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நாட்டிய அரங்கேற்றத்தை துவக்கி வைத்தார்கள். திருச்சி கலை காவேரி கல்லூரி இயக்குநர் பாதர் லூயிஸ் பிரிட்டோ ஆசிர்வாதம் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி கலைமாமணி ராஜமாணிக்கம், புதுச்சேரி பரத நாட்டிய ஆய்வாளர் பி. எச். டி பட்டம் பெற்ற கலைமாமணி மரிய ஸ்டெல்லா, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சிவக்குமார் சிவாஜி,  பரத கலைமாமணி கத்தார்
சூசன், அனுக்கிரா சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் சதிஷ்குமார் மற்றும் மெற்டில்டா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொண்டனர். பழம்பெரும் கலையான பரதத்தை ஊக்குவிக்கும் வகையில்  அரங்கேற்றம் செய்த 13 பேர்களின் தாய் தந்தையருக்கு விஜய்வசந்த் எம். பி பாராட்டு தெரிவித்து   சால்வை அணிவித்து கெளரவித்தார். முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த விஜய்வசந்த் எம். பி  பேண்டு வாத்தியம் முழங்க விழா குழுவினர் வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் .நவீன்குமார் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.