
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையம் கீழ் பவானி வாய்க்காலில் பாலம் கட்டும் பணியினை தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி மாவட்ட ஆட்சி தலைவர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது,90 மிலி பேக்கில் மதுவிற்பனை செய்வது மற்றும் மது கடை நேரம் மாற்றம் செய்வது குறித்து கொஞ்சம் கால அவகாசம் வேண்டும்,ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்க பணிகள் முடிவடைந்து விட்டது ஓரிரு இடங்களில் வேலைகள் இன்னும் முடியவில்லை தண்ணீர் திறக்க முயற்சிக்கிறோம், இரண்டு இடங்களில் வேலை மெதுவாக நடைபெற்றுவருகிறது அதை வேகப்படுத்த அதிக ஆட்கள் பணியில் ஈடுபடுத்த உள்ளன.கீழ்பவானி வாய்க்காலில் நிறைய இடங்களில் வேலைகள் இரவு பகலாக நடந்துவருகிறது,ஆகஸ்ட் 10, 11 ம் தேதிகளில் விரைந்து பணிகளை முடிக்க பணிகள் நடைபெற்று வருகிறது, விவசாயிகள் காங்கிரீட் தளம் அமைக்க போராட்டம் நடத்துவது குறித்து கேட்ட போது, பெரும்பாலான இடங்களில் உள்ள பிரச்னை சுமூகமாக தீர்க்கப்பட்டு உடன்பாடு ஏற்பட்டு விட்டது. ஒரு சில இடங்களில் வரும் பிரச்னைகளை அவ்வப்போது பேசி தீர்ப்பதாக கூறினார்.இதில் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம்,, நம்பியூர் ஒன்றிய கழக செயலாளர் மெடிக்கல் செந்தில்குமார்,எலத்தூர் பேரூர் கழக செயலாளர் எஸ்.எம்.வி.சண்முகம்,கோபி தெற்கு ஒன்றிய செயலாளர் சிறுவலூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் வெள்ளிங்கிரி,மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஆர்பிஎஸ் பழனிச்சாமி, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் ஜே.வி. முருகசாமி,எலத்தூர் பேரூராட்சித் தலைவர் ராஜேஸ்வரி, எலத்தூர் 4-வது வார்டு கவுன்சிலர், முத்துசாமி,ஆதி திராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் பவானிசாகர் சி.கே.சிவாஜி,தகவல் தொழில்நுட்ப துணை அமைப்பாளர்பூர்ண சந்திரன்,இளைஞர் அணி ராஜ்குமார், பாசில், நம்பியூர் பேரூராட்சி 8- ஆவதுவார்டு செயலாளர் என்.எஸ்.ஆனந்தகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.