

தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் முதல் கூட்டமாக மாவட்ட மகளிர் அணி, மகளிர் தொண்டரணி அறிமுக கூட்டம் சுரண்டை கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சங்கீதா, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் திவ்யா மணிகண்டன் மற்றும் அனைத்து மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை பகிர்ந்தனர். இதில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் வருகிற நாடாளுமன்ற தேர்தல் களத்தில் பணியாற்ற மகளிர் அணியின் பங்கு பெரியதாக இருக்க வேண்டும் அதே போல் சமூகவலைதளத்திலும் தக்க பதிலடிகளை எதிரணிக்கு கொடுக்கும் படி சிறப்புரைஆற்றினார்.