தேனி அருகேயுள்ள பழனி செட்டிப்பட்டி பேரூராட்சியில் பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி தலைமையில் துணைத் தலைவர் மணிமாறன் முன்னிலையில் பேரூராட்சியின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 14 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு, மனைப்பிரிவு அங்கீகாரம் மற்றும் சுய உதவி குழு உதவியின் மூலமாக பணிபுரியும் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்த தொகை மீதான விவாதம் நடந்தது.
அப்போது தி.மு.க-வைச் சேர்ந்த 3 வது வார்டு உறுப்பினர் செல்வராஜ் தலைமையில், 7 வது வார்டு உறுப்பினர் கணேஷ் பாபு, 12 வது வார்டு உறுப்பினர் மகாராஜன், 14 வது வார்டு உறுப்பினர் செந்தில் குமரன், 9வது வார்டு உறுப்பினர் லட்சுமி ப்ரியா ஆகியோர் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் உள்ள மனை பிரிவிற்கு இறுதி கட்ட ஒப்புதல் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வெளிநடப்பு செய்தனர்.
மேலும் கூட்டத் தொடரில் தீர்மானத்தில் இடம்பெற்றுள்ள 2வது மற்றும் 4வது தீர்மானத்தை எதிர்த்து, வெளிநடப்பு செய்ததாக, அதற்கு உரிய கோரிக்கை மனுவினை தலைவரிடம் வழங்கினார்கள் தொடர்ந்து பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சி தலைவர் மீது பல்வேறு முறைகேடுகளில் வணிகரீதியாக ரியல் எஸ்டெட் தொழில் செய்யும் நபர்களிடம் உறவு வைத்துக்கொண்டு பல்முறை கேடுகள் செய்தாக விரிவான நீதிவிசாரணை செய்து தவறு செய்த தலைவர் மற்றும் துணைத் தலைவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை.