
தமிழக நிருபர்கள் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா கோரிக்கை மாநாடு பத்திரிக்கையாளர் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று சேலம் மாவட்டம் மேட்டூரில் நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு தமிழக நிருபர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் கு.இராசசேகரன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ஜி.சிவக்குமார் வரவேற்று பேசினார். மாநிலத் துணைத் தலைவர் எஸ்.எம்.ராஜா, மாநில அமைப்பாளர் எம்.ஆர். ஆனந்தவேல், மாநில செய்தி தொடர்பாளர் எம்.பி.ஸ்ரீஇரவிச்சந்திரவர்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அவினாசி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே.சுரேஷ்குமார், மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் ஆ.தணிகாசலம்,கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சி.சங்கு ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
சன் டி.வியின் தலைமை செய்தியாளர் இராம.செல்வராஜ்
பத்திரிக்கையாளர் களின் குழந்தைகள் 9 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் கல்வி ஊக்கத்தொகை வழங்கினார்.
பத்திரிக்கையாளர் களின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிதி உதவி சித்ரா ராஜசேரன் வழங்கினார்.
மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.மரியமுத்து, எம்.எம்.சில்க்ஸ் உரிமையாளர் மற்றும் எஸ்.எஸ்.வி கல்வி குழுமத்தில் சேர்மேன் எம்.முருகேசன், மேச்சேரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழு தலைவர் சீனிவாச பெருமாள், மேட்டூர் தமிழ் சங்க செயலாளர் கு.பாரிஆகியோர் வாழ்த்துரை. வழங்கினார்கள்.
இவ்விழாவில் பங்கேற்ற மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம் பத்திரிக்கையாளர்களுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்று உறுதியளித்தார்.
இம்மாநாட்டில் தாலுக்கா நிருபர்களுக்கு கட்டணம் இல்லா பேருந்து பயண அட்டை,சலுகை விலையில் வீட்டு மனை பட்டா, ரயில்வே பாஸ், ஆகியவை வழங்கப்பட வேண்டும்.
தாலுக்கா நிருபர்களையும் பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் சேர்க்க வேண்டும்.தாலுக்கா அளவில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான நிபந்தனைகளை தளர்த்த வேண்டும்.
தாலுக்கா நிருபர்களுக்கு அரசு அங்கீகார அட்டை வழங்கப்பட வேண்டும்.
அச்சு ஊடகங்களை போன்றே தொலைக்காட்சி செய்தியாளர்கள் கேமரா மேன் களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.
நாட்டு மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் இரவு பகல் பாராமல் பணியாற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதத்தில் மத்திய மாநில அரசுகள் பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு சட்டங்களை இயற்ற வேண்டும்என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இவ்விழாவில்பென்னாகரம் பத்திரிகையாளர் மன்ற தலைவர். ஆ.ஜீவானந்தம், விநாயகா கல்வி குழும சேர்மன் வி.கணேசன் மூத்த பத்திரிகையாளர்கள் எஸ்.டி.குமரேசன், ஆர்.எஸ்.சக்திவேல், ஆர்.ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோருக்கு பட்டாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
முடிவில் தமிழக நிருபர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் ச.செந்தில்குமார் நன்றி கூறினார்