விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில். விநாயகர் சிலைகள் நிறுவுதல். மற்றும் வழிபடுதல். இது தொடர்பான வழிகாட்டுதல்கள் ஆலோசனை கூட்டம் திருத்தணியில் நடைபெற்றது. திருத்தணி டி.எஸ்.பி. விக்னேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின் ஏற்பாட்டாளர்கள் . நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம். மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ள விதிகளின்படி சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும். சிலைகளுக்கு பூசப்படும் வர்ண்ணமானது நீரில் எளிதில் கரையக்கூடிய மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் விநாயகர் சிலை எழுப்பும் இடங்களில் எளிதில் நுழைவதற்கும். வெளியேறுவதற்கும். போதுமான அகலமான நுழைவு மற்றும் வெளியேறும் வசதிகளை வழங்க வேண்டும். நிறுவப்பட உத்தேசத்திள்ள சிலையின் உயரம் அடித்தளம் மற்றும் மேடை உட்பட 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். விநாயகர் சிலை நிறுவி வழிபாட்டு முறை பூஜைகள் செய்யும் இடங்களில் அருகாமையில் கல்வி சாலைகளோ வழிபாட்டுத் தலங்களோ இருக்க கூடாது. மதம் சார்ந்த. அரசியல் சார்ந்த பேனர்களை கண்டிப்பாக வைக்கக் கூடாது. மேலும் விநாயகர் சிலை வைக்கும் இடங்களில். கரைக்கும் இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்க கூடாது. பூஜை நேரம் காலை 2 மணி நேரமும் மாலையில் 2 மணி நேரம் மட்டுமே ஒலிபெருக்கி அமைக்க வேண்டும். மேலும் கூம்பு வகையான ஸ்பீக்கர்கள் தடை செய்யப்பட்டுள்ளது.பொது இடங்களில் வழிபடும் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்ட நாளிலிருந்து ஐந்து நாட்களுக்குள் கரைக்கப்பட்ட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து காவல்துறை சார்பாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி இந்த ஆலோசனை வழங்கப்படுவதாக கூறினர். விழா ஏற்பாட்டாளர்கள் நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு தந்து எந்த வித அசம்பாவிதம் ஏற்படாமல் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கூட்டத்தில் டி.எஸ்.பி விக்னேஷ் கூறினார். இந்த கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம் ராஜ் .சப் இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி. மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர். விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் வழிகாட்டுதலின்படி அடையாளம் காட்டப்பட்ட நீர் நிலைகளில் தான் கரைக்க வேண்டும் . என்பதற்கு வழக்கமாக திருத்தணி அருகில் ஓடும் நந்தியாற்றிலல் கரைப்பதற்கு ஏதுவாக உத்தரவு வழங்க வேண்டும் என கூட்டத்தில் விழா ஏற்பட்டாளர்கள் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர். மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிப்பதாக டி.எஸ்.பி. விக்னேஷ் கூறினார்..