
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்பிகை 9 வடிவங்களில் வணங்கப்படுகிறாள்.முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்சமாக வழிபடப்படுவாள். அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி அம்சமாக அம்பிகை வழிபடப்படுவாள். இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி அம்சமாக அம்பிகை வழிபடப்படுவாள். இந்த ஒன்பது நாட்களும் ஒவ்வொரு நாளும் அன்னை எடுத்த அவதார நோக்கத்துக்கு ஏற்ப அலங்காரம் செய்யப்படும். பாடல், கோலம், நைவேத்தியங்களும் அம்பிகையின் அவதார நோக்கத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும்.