
திருத்தணி அருகே பூமியில் தானே தோன்றிய பாலமுருகன் சுவாமியை தரிசிக்க வந்திருந்த ஸ்ரீலஸ்ரீ மகாநந்த சித்தரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கூடியதால் இந்த பகுதி ஆன்மீக பூமியாக மாறியது. திருத்தணி அடுத்த நத்தம் கிராமத்தில் சாலை ஓரத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல் தூண்களால்ஆன மண்டபம் உள்ளது.வழி போக்கர்கள் இளைப்பாறாகவும். சுற்றுப்புற கிராமங்களில் இருப்பவர்கள் விருந்தோம்பல் செய்து விழாக்கள் எடுப்பதுமாக இந்த மண்டபத்தை பயன்படுத்தி வந்தனர். பெங்களூர். சித்தூர் மற்றும் வேலூர் ராணிப்பேட்டை மாவட்டங்கள். அடங்கிய காவடி கொண்டு வரும் பக்தர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஆடி கிருத்திகை நாள் அன்று இங்கே கூடி ஓய்வெடுத்து. இங்கு உள்ள பழமையான குளத்தில் நீராடி. உணவு சமைத்து .பொங்கல் இட்டு படையலிட்டு பின்னர் திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்று காவடி செலுத்துவது வழக்கத்தில் உள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் ஆடிக்கிருத்திகை திருவிழா நடைபெற்ற போது 8.ம்தேதி ஆடி பரணி அன்று இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் திடீரென ஒரு சிறுவன் மந்திர வாக்காய் நான் தான் முருகன் வந்திருக்கிறேன். இந்த இடத்தில் நான் புறப்பட்டு இருக்கிறேன். பூமியில் உள்ள என்னை எடுத்து இந்த மண்டபத்தில் வைத்து வழிபடுங்கள் என்று வாக்கு சொன்னதால். பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் மற்றும் கிராம பொது மக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட இடத்தில் மண்ணை தோண்டும் போது அழகான ஒன்றரை அடி உயரமுள்ள பாலமுருகன் சுவாமிசிலை இருந்தது கண்டறியப்பட்டது.
இந்த தகவல் காட்டுதீ போல் பரவியதால் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது அப்போது தகவல் இருந்த வருவாய் துறை அதிகாரிகள் சிலையை கைப்பற்று வந்த போது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால். அந்த மண்டபத்திலேயே சிலையை பிரதிஷ்டை செய்து தற்போது பூஜைகள் நடத்தி வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் மகா தேவமலை ஸ்ரீலஸ்ரீ மகாநந்த சித்தர் இந்த முருகனை வந்து வழிபட வேண்டும் என்று தியானித்து நேற்று இந்த பகுதிக்கு வருகை தந்தார். அவரை யாதவ மகாசபை மாநில துணைத்தலைவர் ஏ.கே. சுப்பிரமணியன் யாதவ் தலைமையில் எஸ். அக்ரஹாரம் ஊராட்சி மன்ற தலைவர் எல். நாராயணன் மற்றும்கிராம பொதுமக்கள் பக்தர்கள் சிறப்பாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து பாலமுருகன் கடவுளை வணங்கி தரிசனம் செய்த சித்தர் அங்குள்ள புனித நீர் குளத்தில் இறங்கி பார்வையிட்டார். இவரை காண ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் அனைவருக்கும் மகாநந்த சித்தர் அருள் ஆசி வழங்கினார் தொடர்ந்து பிரசாதங்கள் அன்னதானம் வழங்கப்பட்டது. சாதாரணமான கல் தூண் மண்டபமாக காட்சியளித்த இந்த இடம்.
தற்போது ஒரு பிரசித்தி பெற்ற ஆன்மீக பூமியாக உருவெடுத்து. அன்றாடம் பூஜை. பக்தர்கள் வருகை மற்றும் விழா. விருந்தோம்பல் என களைகட்டி வருகிறது.