தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் குற்றாலத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு பேரூர் கழக செயலாளரும் பேரூராட்சி மன்ற தலைவருமான கணேஷ் தாமோதரன் ஏற்பாட்டில் தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்கள் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது, நிகழ்ச்சிக்கு மாநில அமைப்புச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி ஜி ராஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தெற்கு மாவட்ட ஜெ பேரவை செயலாளருமான கே ஆர் பி பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர் இந்நிகழ்ச்சியில் மாவட்ட  அவைத் தலைவர் சண்முகசுந்தரம், பொருளாளர் சாமிநாத பாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் காத்தவராயன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நெல்லை முகிலன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குற்றாலம் சேகர், ஒன்றிய செயலாளர்கள் சங்கரபாண்டியன், அமல்ராஜ், இருளப்பன், என் எச் எம் பாண்டியன், அருவேல்ராஜன் மேலகரம் பேரூர் கழக செயலாளர் வழக்கறிஞர் கார்த்திக்குமார், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் சேர்மபாண்டி, தங்கபாண்டியன் குற்றாலம் பேரூர் அவைத்தலைவர் சங்கரராமன் பேரூர் கழக துணை செயலாளர் மாவட்டம் எ கருப்பசாமி பாண்டியன், வார்டு செயலாளர்கள் பாஸ்கர், சின்னதம்பி, அமுல்ராஜ், அருண், மாவட்ட பிரதிநிதி ஜெயகுமார், ஜமால் மணி, குமாரசாமி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வினிஷ் , துணை செயலாளர் சாமி, காசிமேஜர்புரம் கிளை செயலாளர் அய்யப்பன், ஊராட்சி மன்ற துணை தலைவர் ரவிக்குமார் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.