திருத்தணி தளபதி கே. விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பிரமாண்டமான மது மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
கமலா திரையரங்கம் அருகில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியை திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன், கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கல்லூரியின் தாளாளர் டாக்டர் எஸ்.பாலாஜி. கல்லூரியின் முதல்வர் ஆர். வேதநாயகி. துணை முதல்வர் பொற்செல்வி. மற்றும் திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ம.கிரண் நகராட்சி கவுன்சிலர் கே எஸ். அசோக்குமார். சிறுபான்மை நல பிரிவு சித்திக் அலி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மதுவால் ஏற்படும் தீமைகளையும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக கூடாது சமூகத்தில் மது வகைகள் மற்றும் போதை வழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்களை தாங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பி கல்லூரி மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். முக்கிய சாலைகள் வழியாக சென்ற பேரணி. ம.பொ.சி. சாலை
தளபதி கே. விநாயகம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியை வந்து அடைந்தது.