திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் முருநெல்லிக் கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சுள்ளெரும்பு நால்ரோட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனை, முருநெல்லிக் கோட்டை ஊராட்சி, இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாமை ஊராட்சி மன்ற தலைவர் சின்னு என்ற முருகன் துவக்கிவைத்து அவரும் பரிசோதனை செய்துகொண்டார்.இம்முகாமில் 15 பேர் கொண்ட மருத்துவக் குழு தொழில் நுட்ப வியலாளர்கள் முகாமிற்கு பிரத்தியோகமான முறையில் வடிவமைக்கப்பட்ட மருத்துவ வாகனம் கொண்டுவரப்பட்டு இலவசமாக ரத்த பரிசோதனை, இ, சி ஜி, எக்ஸ்ரே, ‘ரத்த அழுத்தம், நெஞ்செரிச்சல், இருதய வலி, நீரிழிவு நோய், ஆஸ்துமா, சிறுநீரகம் ஆகிய நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளித்து அதன் பின்பு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பெண்களுக்கான சிறப்பு மருத்துவர்கள் இதில் கலந்து |கொண்டனர். முகாமில் மருத்துவர்கள் கார்த்திகேயன், மாலா,ஸ்டீலி,நவீன், கவிதா,ஆகியோர்கள் கலந்து கொண்டு வருகை தந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர் இதில் மாவட்ட கவுன்சிலர் சுப்புலெட்சுமி சண்முகவேல்,ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ராஜேஸ்வரி தமிழ்செல்வன், துணைத் தலைவர் வி.பி.செந்தில்குமார்,சுக்காம்பட்டி ஊர் கவுண்டர் பெரிய ராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்