நீலகிரி மாவட்டம் குன்னூரில் தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சுற்றுலா சென்று திரும்பிய போது எதிர்பாராத விதமாக பேருந்து விபத்தில் சிக்கி 30 அடி பள்ளத்தில் விழுந்தது. அப்போது அந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். அதில் 8 பேர் கடையம் பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று அவர்களது உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் இன்று அவர்களது வீட்டிற்கு நேரில் சென்ற தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலா 10000 ரூபாய் வீதம் 80000 ரூபாய் வழங்கி ஆறுதல் கூறினார். உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், மகேஷ் மாயவன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.