
காந்தி ஜெயந்தி முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தி பொதுமக்களிடம் குறைகள் கேட்டு அடிப்படை தேவைகளை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றி வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ். உத்தரவிட்டதன்பேரில் திருத்தணி அடுத்த கார்த்திகேயபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம். ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா குப்பன் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி. மோட்டூர் பகுதியில் நியாய விலை கடை அமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் வழங்கினர். மேலும்
வி. ஜி. எஸ் நகர் பகுதியில் உள்ள குளத்தின் சுற்றுப்புறத்தில் காம்பவுண்ட் சுவர் எழுப்பி. நடை பயிற்சி பாதையை சீரமைக்க வேண்டும். மற்றும் வள்ளியம்மாபுரம் கிராமம். மற்றும்.. இங்கு உள்ள குவாட்டர்ஸ் பகுதியிலும் சிமெண்ட் சாலைகள். மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிராம சபை கூட்டத்தில் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான முக்கிய தீர்மானமாக இங்கு உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என வலுவான கோரிக்கை கூட்டத்தில் எழுப்பப்பி.மனு வழங்கப்பட்டன. தற்போது அரக்கோணம் சாலையைஒட்டி இந்த புதிய பைபாஸ் உள்ள பகுதியில் டாஸ்மாக் கடைகள் இயங்குவதால் பொதுமக்கள் அச்சத்தோடு செல்வதாகவும். இந்த கிராம பகுதியில் அடங்கிய பெண்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை நீடிப்பதாகவும் உடனடியாக டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலக பற்றாளர். கிராம நிர்வாக அதிகாரி கிரண் குமார். ஊராட்சி செயலாளர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.