
அரியலூர் மாவட்டம், திருமானூர் பிரேம் திருமண மண்டபத்தில், திருமானூர் கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற ரத்த தான முகாம் நிகழ்ச்சிகளுக்கு, பாரதிய ஜனதா கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளர் காளிராஜ் தலைமை வகித்தார். திருமானூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மணிவண்ணன், சுகாதார மேற்பார்வையாளர் வகீல் உள்ளிட்டோர் மேற்பார்வையில், நடைபெற்ற மருத்துவ முகாமில், அரியலூர் அரசு மருத்துவமனையின் ரத்த வங்கி மருத்துவர் டாக்டர் சந்திரசேகரன், சுகாதாரப் பணியாளர்கள் சிவராமன், எசக்கியேல் விவின், அருள் ராமமூர்த்தி, உள்ளிட்டோர் பொதுமக்களிடம் இருந்து ரத்த தானம் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஐயாரப்பன், நடராஜன், அபிராமி, மாவட்டத் துணைத் தலைவர் விருத்தாசலம், மற்றும் கட்சி நிர்வாகிகள் சேட்டு, தேவேந்திரன், அண்ணாமலை, செல்வராஜ், சிவாஜி, கார்த்திகேயன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.