தென்காசி மாவட்டத்தில் இயங்கி வரும் இயற்கை வள பாதுகாப்பு சங்கம் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு போகும் கனிமவளங்களை கொண்டு செல்லக்கூடாது என்று பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. 

அந்த அமைப்பின் சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது அதில் கூறியிருப்பதாவது தமிழகத்தில் இருந்து ராட்சத வாகனங்கள் மூலம் கனிமவளங்களை கேராளவிற்கு கொண்டு செல்லும் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்கின்றன கனிமவள வாகனங்கள் பள்ளி மாணவ மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் வரிசையாக சென்று கொண்டிருக்கிறது எனவே  கேரளாவில் பள்ளி துவங்கும் நேரமான காலை 8.30 முதல் 10 மணி வரையிலும் மாலை பள்ளி முடியும் நேரமான 3.30 மணி முதல் 5 மணி வரை கனிமவள வாகனங்கள் போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளனர் அதே போல் அதே நேரத்தில் தமிழகத்திலும் கனிமவள வாகனங்கள் சாலையில் பயணிக்க தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.