
திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய பழவேற்காடு பகுதியில் உள்ள பெண்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக கைத்தொழில் பயிற்சிகள் சமூகம் சார்ந்த கிராமப்புற மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைப்பெற்று வருகிறது.பெண்களுடைய வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படுத்தும் வகையில் 50 பெண்கள் பங்கேற்கும் இப்பயிற்சி துவங்கப்பட்டுள்ளது.காலை,மாலை வேளைகளில் இரண்டு விதமான பயிற்சிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு இரண்டு மாதகாலம் பயிற்சி அளித்து அரசு உதவிபெறும் வழிமுறைகளையும் கூறி ஊக்கப்படுத்தவுள்ளது.கோட்டைக்குப்பம்,தோனிரேவு,ஜமீலாபாத் ஆகிய கிராமத்தில் அடங்கிய பெண்கள் தங்களுடைய வருமானத்தை பெருக்கக் கூடிய வகையிலே தையல் தொழிலை தேர்ந்தெடுத்து கம்யூனிட்டி பேஸ்ட் ரூரல் டெவலப்மென்ட் டிரஸ்ட் வழியாக மேற்கொள்ள அந்நிறுவனத்தின் இயக்குனர் ஹாஜா மொய்தீன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சமூக அக்கறையுள்ள தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.