சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் தமிழ் வழியில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது .தமிழ் குடமுழுக்கு கூட்டு இயக்கத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி தலைமையில் சூலாயுதம் ஏந்தி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதில் அனைத்து கோவில்களிலும் தமிழில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று தமிழ் ஆன்மீக மற்றும் அமைப்புகள் சார்பில் விருப்ப கடிதங்களை இந்து சமய அறநிலை துறை அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளோம். ஆனால் இதற்கான பதில் இதுவரை வரவில்லை எனவே கோட்டை மாரியம்மன் கோவிலில் தமிழ் வழியில் கும்பாபிஷேகம் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நுகர்வோர் உரிமைகள் இயக்கத்தின் நிறுவனர் பூபதி, தமிழ் தேச மக்கள் முன்னணி, தமிழர் கலாச்சார இயக்கம் போன்ற அமைப்புகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பொன் சரவணன் தலைமை தாங்கி நடத்தினார்.மேலும் பாஜக கட்சியின் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு பிரிவின் மாநில தலைவர் கோபிநாத் கொடுத்துள்ள மனுவில் கோட்டை மாரியம்மன் கோவில் வருகிற 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவில் கலந்து கொள்ள மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொள்வார்கள். எனவே அன்றைய தினம் மாவட்ட நிர்வாகம் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.