தேசிய மக்கள் சக்தி கட்சி மற்றும் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் காவேரி தண்ணீரை தர மறுக்கும் கர்நாடகா அரசையும், ஒன்றிய பாஜக அரசையும் கண்டித்தும், இதற்கான நிரந்தரத் தீர்வை மேற்கொள்ள வேண்டி தமிழக திமுக அரசை வலியுறுத்தியும் தஞ்சாவூர் கல்லணையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய மக்கள் சக்தி கட்சியின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.இரவி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஆர்.சேர்மா செல்வராஜ், அரசியல் ஆலோசகர் சிவஞான சம்பந்தன், தமிழ் விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி, மாநில அமைப்பாளர் வீ.கோபிநாத், குறு விவசாயிகள் சங்கத் தலைவர் பேராசிரியர் ஆர்.காளிதாஸ், தேசிய மக்கள் சக்தி கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் ஆழ்வாநேரி சேவை எஸ்.பாக்கியமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் அம்பை. ஒன்றியத் தலைவர் மணி, இராதாபுரம் ஒன்றியச் செயலாளர் அண்ணாமலை, தமிழ் விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் கூவலூர் சுப்புராஜ், தேசிய மக்கள் சக்தி கட்சியின் அமைப்புச் செயலாளர் பேராசிரியர் ஏ.சிவகுமார், மாநில வர்த்தகப்பிரிவு செயலாளர் ஆர்.தனசேகரன், திருச்சி மகளிர் அணிச் செயலாளர் அன்னலட்சுமி, எட்டு வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகி கா.பழனியப்பன், மக்கள் பாதை அமைப்பின் நிர்வாகி திருச்சி தங்கவேல், மது ஒழிப்பு போராளிகள் வீ.சுந்தர், சசி சுப்பிரமணி, சமூக ஆர்வலர் பனசை அரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சோசியலிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் தலைவர் தஞ்சை. இளஞ்சிங்கம் சிறப்புரை ஆற்றினார்.