
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம் ,இலவம்பாடி கிராமம் கொல்லை கிணற்றங்கரையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஜடாமுனிஸ்வரர் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது .இதில் கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் ,ரக்ஷாபந்தனம், மகா சங்கல்பம், ,கணபதி ஹோமம், லட்சுமி நவக்கிரக ஹோமம் ,கோ பூஜை ,விசேஷ திரவிய ஹோமம் ,மகா பூர்ணாஹுதி, மற்றும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் ,நடைபெற்றது . கும்பாபிஷேக விழாவில் தண்டு வீடு வகையறா, மாரி வீடு வகையறா ,ஓயான் வீடு வகையறா ,மற்றும் இலவம்பாடி ஊர் பொதுமக்கள் ,இளைஞர்கள், விழா குழுவினர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.