தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முதல்முறையாக மூன்று சிறார்களுக்கு அதி நவீன ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். 

இது தொடர்பாக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய பிரிவில், இருதய ரத்தக்குழாய் நுண் சிகிச்சை ஆய்வு கூடம் (கேத்லேப்) ஆரம்பித்து கடந்த மூன்று வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாரடைப்பு நோயாளிகளுக்கான ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்டி stent சிகிச்சை கடந்த மூன்று வருடங்களாக சிறப்பாக செய்யப்பட்டு,சுமார் 3000-க்கும் மேற்பட்டவர்கள் பயன் அடைந்துள்ளனர். 

தற்பொழுது மேலும் ஒரு மைல் கல்லாக ஒரு அதிநவீன சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பிறக்கும் குழந்தைகளுக்கு நூற்றில் ஒருவருக்கு இருதய கோளாறு இருக்க வாய்ப்புண்டு. அவற்றில் பெரும்பாலும் இருதயத்தில் உள்ள இரண்டு அறைகளுக்கு நடுவே உள்ள சுவரில் ஏற்படும் ஓட்டையாகும். இதை ASD,VSD,PDA என்று ஆங்கிலத்தில் அழைப்பர். 

இந்த வகை ஓட்டைகள் ஆரம்ப காலகட்டங்களில் ஓபன் ஹார்ட் சர்ஜரி, இருதய பைபாஸ் சிகிச்சை மூலமாகவே சரி செய்யப்பட்டது. பின்னாளில் அறுவை சிகிச்சை இல்லாமல் ஆஞ்சியோகிராம் மூலம் ஓட்டைகளை அடைக்கும் அதிநவீன சிகிச்சை செயல்பாட்டிற்கு வந்தது. இவ்வகை சிகிச்சையில் உடம்பில் தழும்பு மற்றும் இரத்த இழப்பு ஏற்படவதில்லை.

இத்தகைய அதிநவீன இருதயத்தில் உள்ள ஓட்டையை ஆஞ்சியோ மூலம் சரி செய்யும் சிகிச்சை சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே செயல்பட்டு வந்தது. இந்த அதிநவீன ஆஞ்சியோகிராம் மூலம் இருதய ஓட்டையை சரி செய்யும் சிகிச்சை நமது தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் முதல்முறையாக மூன்று சிறார்களுக்கு நடந்த 28ம் தேதி வெற்றிகரமாக ஒரே நாளில் செய்து முடிக்கப்பட்டது.

மூன்று குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளனர். இவற்றில் நாலு வயது குழந்தை, 15 வயது சிறுவன், 14 வயது சிறுமி ஆகியோர் ஆகியோர் அடங்கும். இவர்களுக்கு ASD எனப்படும் இருதய அறைகளுக்கு இடையில் காணும் ஓட்டை ஓபன் சர்ஜரி இல்லாமல் சரி செய்யப்பட்டது. சிகிச்சை அனைத்தும் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலம் இலவசமாக பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டது.இந்த சிகிச்சை தனியார் மருத்துவ தனியார் மருத்துவமனையில் செய்வதற்கு சுமார் 2 லட்சம் வரை செலவாகும். 

இந்த சிகிச்சை இருதய மருத்துவத்துறை நோடல் அதிகாரி டாக்டர் பாலமுருகன், குழந்தைகள் இருதய மருத்துவ நிபுணர் டாக்டர். செந்தில்குமார், டாக்டர் கணேசன், டாக்டர் வெங்கடேஷ்,டாக்டர் ஆலன்பெண்ணி செவிலியர்கள், மயக்கவியல் நிபுணர்கள்,கேத் டெக்னீசியன்கள், ஆகியோர் கொண்ட அந்த குழுவினால் சிறந்த முறையில் செய்து முடிக்கப்பட்டது.

இந்த வகை சிகிச்சை இப்பொழுது நமது இருதய பிரிவில் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்யத்  தொடங்கியுள்ளதால் பயனாளிகள் இனி சென்னை வரை செல்லும் அவசியம் இல்லை. இங்கேயே வந்து பரிசோதனை செய்து சரி செய்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இவை அனைத்தும் இருதய மருத்துவர்கள், செவிலியர்கள், ஒருங்கிணைந்த முயற்சியாலும் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.ஜி சிவகுமார் அவர்களின் வழிகாட்டுதலின் படியும், முதல்வரின் தனிப்பட்ட கவனத்தினாலும் சாத்தியமானது.

மேலும் துறை தடையின்றி சேவையாற்றிட நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சைலஸ் ஜெயமணி, மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் டாக்டர் ஆர் பத்மநாபன், டாக்டர் குமரன்,மருத்துவ துறை பேராசிரியர்கள் டாக்டர் ராஜவேல்,டாக்டர் பரத்,டாக்டர் இ மணிமேகலை, மயக்கவேல் பேராசிரியர் டாக்டர் வி. மனோரமா, குழந்தைகள் மருத்துவத்துறை தலைவர் டாக்டர் அருணாசலம் ஆகியோர் சிறந்த பங்காற்றி வருகின்றனர். பொதுமக்கள் இருதய நோய்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் புரிதலை நன்கு அறிந்து தகுந்த நேரத்தில் மருத்துவமனையின் சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.