
மனித உரிமைகள் மற்றும் மனித வள மேம்பாட்டு .அமைப்பு மாநிலத் தலைவர் டாக்டர் K. சுரேஷ் அவர்கள் பருவ மழை கால பிரச்சனைகள் குறித்து பொதுமக்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
அக்டோபர் மாதம்முதல் ஜனவரிமாதம் வரைநான்கு மாதங்கள் மழை காலம் என்பதால்மக்களுக்குமிகவும் ஆபத்துகள் ஏற்படுத்துகின்ற காலங்களாக இருக்கும், இந்த காலங்களில் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், வீட்டின் முன் மின் சாதனப் பொருட்கள் கையாளும்போது மிகவும் கவனமாகஇருக்கவேண்டும் மின்விளக்கு மின்விசிறி, மிக்ஸி,அயன் பாக்ஸ்,போன் சார்ஜர்போன்ற மின்சாதன பொருட்கள் மனிதனை தாக்கும்வாய்ப்புகள்அதிகம் எனவே அவற்றை கவனமாக
கையாள வேண்டும். சாலையில் பயணிக்கும் போது மின்சார கம்பிகள் அருந்து இருந்தால் கவனமாக சாலையைகடக்கவேண்டும். பழைய வீடுகளில் வசிப்போர் அடிக்கடி வீட்டின் சுற்றுச்சூழலை கண்காணிக்க வேண்டும்.
மழைக்காலங்களில்
வீட்டை சுற்றி வீட்டின் உள்ளே வெளியேயும் பாம்புகள் தேள் மற்றும் விஷ பூச்சிகள் மனிதனை தாக்கும் எனவே கவனமாக இருக்கலாம். மழைக்காலம் குளிர்காலங்களில்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடிநீர் காய்ச்சி வடிகட்டி நீரை பருகவேண்டும்.
குழந்தைகள் சுடுநீர்குடிக்க வைக்கவேண்டும் வீட்டை சுற்றிலும் செடி புதர்கள் மற்றும் மழை நீர்தேங்காமல் செய்தல்வேண்டும் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் கிருமிகள், கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
கை, கால் மற்றும் முகம் சோப்பு கொண்டு நன்கு கழுவவேண்டும்வெளியில் செல்லும்போதுதலைக்கவசம் குடை ரெயின் கோட் பாதுகாப்பு கவசத்துடன் செல்லவேண்டும்வெளியில் பொருட்கள் வாங்கசெல்லும் போது கையில் துணிப்பை
கொண்டு செல்லவும், ஏனென்றால் பிளாஸ்டிக் பைபோன்றகுப்பைகள் மழை நீர் வெளியே செல்லாமல் தடுக்கின்றன.
எனவே பிளாஸ்டிக் பையை தவிப்போம் இது போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மனிதகுலத்திற்கு பேராபத்திலிருந்து காத்துக் கொள்ள நாம் கவனமாக இருக்க வேண்டும்.
இதுபோன்றமழைக்காலம் ஏற்படும்.ஆபத்துக்களால்நம் செலவினங்கள்செய்யும்போது பொருளாதாரத்தில்பின்னடை சந்திப்போம் மனித உயிர் இழப்பு ஏற்படும் பெரும் பின்னடைவை சந்திக்க நேரிடும் எனவே வரும் மழை காலங்களில் நாம் மிகவும் விழிப்புடன் வாழ்வோம் என்று பொது மக்களுக்கு மாநிலத் தலைவர் டாக்டர் சுரேஷ் அவர்கள் சார்பாக ஆலோசனை வழங்கியுள்ளார்.