திருவாரூர் மாவட்ட தி.மு.க. மற்றும் திருவாரூர் மாவட்ட விளையாட்டு
மேம்பாட்டு அணி இணைந்து நடத்தும் கலைஞர் நூற்றாண்டு விழா மாபெரும் ரோபோ
போட்டி கலைஞர் கோட்டம் அரங்கில் நடைபெற்றது . மாவட்ட செயலாளர் பூண்டி
கே.கலைவாணன் எம்.எல்.ஏ.தலைமை ஏற்று போட்டிகளை துவக்கி வைத்தார்.
மண்ணின் மைந்தர் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டுவிழா
உலகம் முழுவதும் வாழுகின்ற தமிழர்களால் சிறப்போடு கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்ட திமுக மற்றும் திருவாரூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி
இணைந்து மாபெரும் மாநில அளவிலான ரோபோ போட்டிகள் திருவாரூர் கலைஞர்
கோட்டத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ.தலைமை ஏற்று
போட்டிகளை தொடங்கி வைத்தார் . விளையாட்டு மேம்பாட்டு அணி திருவாரூர் மாவட்ட
அமைப்பாளர் எம்.என்.ராஜா வரவேற்புரையாற்றினார்.விழாவில் தமிழ்நாடு முழுவதிலும்
இருந்து 50க்கும் மேற்பட்ட விளையாட்டு அணிகள் பங்கேற்று , கணனியால்
வடிவமைக்கப்பட்ட ரோபோக்கள் நடத்திய சாகசங்களை காட்சிப்படுத்தினர். இந்த
போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள்
வழங்கப்பட்டன. முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவினை திருமதி சித்ரா மற்றும் மாவட்ட விளையாட்டு அணியின் நிர்வாகிகளான
பி.ஜி.ஆர். ராஜாராம் , ப.இளவரசன், எஸ்.ஜாகிர் உசேன், பி.எழில், தி.விமல்ராஜ்,
பி.ஜி.கோபிநாத் , பொ.பத்மபிரசாத், ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட துணை அமைப்பாளரும் மாவட்ட
கூடைப்பந்து கழக தலைவருமான வி.ஆர்.என்.பன்னீர்செல்வம் இறுதியில் நன்றி கூறினார்.