திருவள்ளூர் மாவட்டம்,கொண்டக்கரை ஊராட்சிக்குட்பட்ட குருவி மேடு பகுதியில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்திற்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பு குழாயில் இருந்து ஒரு பகுதி குருவிமேடு பகுதி மக்களுக்கு குடிநீர் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டு வந்தது. குடிநீருக்கான செலவினம் அதிகம் ஆவதாக கூறி குறிமேடு பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் இணைப்பினை என் டி சி எல் நிறுவனம் நிறுத்தியது. இதனால் ஆறு மாத காலமாக குடிநீரின்றி பொதுமக்கள் அவதியுற்ற நிலையில் நேற்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது அப்பகுதியில் சமூக சேவகராக செயல்பட்டு வரும் ஜெயபிரகாஷ் இரு தரப்பினருக்கும் இடையே சமாதான முயற்சியில் ஈடுபட்டு மீண்டும் குருவிமேடு பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.