பள்ளிப்பட்டு பேரூராட்சியில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஊராட்சி முனிரெட்டிகண்டிகை கிராமத்தில் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் ஆன்மீக பக்தி பெருகோடு நடைபெற்றது. பழமை வாய்ந்த இவ்வாலயம் இடிக்கப்பட்டு புதியதாக கிராம பொதுமக்கள் பக்தர்கள் மூலம் கோபுரம் மற்றும் விமானக் கலை நாயத்தோடு புனரமைக்கப்பட்டுநடைபெற்ற இந்த மஹா கும்பாபிஷேக விழாவில். கடந்த மூன்று நாட்களாக திருக்கோயில் வளாகத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு யாகசாலைகள் அமைக்கப்பட்டு நித்திய ஹோம குண்டம் நிறுவி கலசங்கள் நிறுத்தி நவகிரக ஹோமம் மஹா பூர்ணாஹுதி பூஜைகள் நடைபெற்ற வந்தன. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. பட்டாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது .அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது இதனை தொடர்ந்து திருக்கல்யாண நடைபெற்றது .பக்தர்கள் அனைவருக்கும் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பள்ளிப்பட்டு பேரூராட்சி கழக செயலாளர் எம். ஜே. ஜோதி குமார், கவுன்சிலர்கள் முரளி, அபி, முனி கிருஷ்ணன், லயன்ஸ் சங்க பொருளாளர் விவசாயி வேலு ,மற்றும் கிராம பொதுமக்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.