திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிக்குளம் அருள்மிகு ஸ்ரீ பால விநாயகர், ஸ்ரீ பெரிய தாயார் மயன மங்கையர்க்கரசி, வேல் அம்பாரிசன் ஸ்ரீநிவாச சுடலை ஆண்டவர், ஸ்ரீதேவி, பூதேவி அம்பாள் திருக்கோவிலின் “புனர் பிரதிஷ்டை மகாகும்பாபிஷேக விழா” வெகு விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை 5மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கப்பட்ட முதல்நாள் திருவிழாவில், ஸ்ரீ மகாகணபதி ஹோமம், ஸ்ரீ நவகிரக ஹோமம், ஸ்ரீ மகாலெட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், கோ பூஜை உள்ளிட்ட பூஜைகளைத் தொடர்ந்து தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. மாலை புனிதநீர் எடுத்து வந்து, கும்ப அலங்காரத்துடன் பிரவேச பலி எடுக்கப்பட்டு, யாகசாலை செய்யப்பட்டன.
இரண்டாம் நாள் காலையில் விக்னேஸ்வர பூஜை, பிம்பசுத்தி, மூர்த்தி ரக்க்ஷா பந்தனம், தீபாராதனை மற்றும் யாத்ரா தானம், விமான கோபுரங்கள், மூலஸ்தான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் மற்றும் தீபாரதனையுடன் பிரசாதமும் வழங்கப்பட்டது. நண்பகல் 12மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தெற்கு கள்ளிகுளம் ஸ்ரீ பால விநாயகர், ஸ்ரீ பெரிய தாயார் மயன மங்கையர்க்கரசி, வேல் அம்பாரிசன் ஸ்ரீநிவாச சுடலை ஆண்டவர், ஸ்ரீதேவி, பூதேவி அம்பாள் திருக்கோவிலின் நிர்வாகிகள் பி.ஆறுமுகம், ஏ.ஜெயபாலன், ஜெ.சபரி ஆகியோர் செய்திருந்தனர். இத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.