தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் மின் பயனீட்டாளர்கள் குறைதீர் நாள் கூட்டம் தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் கோட்டத்தில் உள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தில் வைத்து அளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர்.சந்திரசேகரன், கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த மனுக்கள் மற்றும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க கடையநல்லூர் கோட்டம் செயற்பொறியாளர் (பொறுப்பு ). மாரியப்பன், மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் கடையநல்லூர் கோட்டத்தின் அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.மின் பயனிட்டாளர்களின் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு பின் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை மின் பொறியாளர் பேசும் பொதுமக்கள் குறைந்த மின்னழுத்தம் சம்பந்தமாக ஏதேனும் புகார் அளித்தால் உடனடியாக அந்தப் பகுதியை ஆய்வு செய்து தேவைப்படும் இடங்களில் புதிய மின்மாற்றி அமைப்பதற்கு மதிப்பீடு தயார் செய்து உடனடியாக பணிகளை மேற்கொண்டு சீரான மின் வினியோகம் வழங்கவும், விநியோகத்தில் உள்ள மின்மாற்றிகள், மின் பாதைகள், முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு தங்கு தடையின்றி மின் வினியோகம் வழங்கவும், பழுதான மின்கம்பங்கள், மின்சாதனங்களை, உடனடியாக மாற்றி புதியதாக அமைப்பதற்கும், பள்ளி குழந்தைகளுக்கு அரையாண்டு தேர்வு நடைபெறும் சமயங்களில் இரவு நேரங்களில் கூடுதல் கண்காணிப்புடன் பணிபுரிவதற்கும், மின் வழித்தடங்களில் உள்ள மின் தடங்கல் ஏற்படுத்தும் மர கிளைகளை அப்புறப்படுத்தவும், விவசாய நிலங்களில் மின்வேலி அமைக்கப்பட்டிருந்தால் உடனடியாக மின் இணைப்பு துண்டித்து காவல்துறை மூலம் சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கவும்,மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் தொடர் கண்காணிப்பு மேற்கொண்டு வனவிலங்குகளால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதனை உடனடியாக சரி செய்வதற்கும், அனைத்து மின் இணைப்புகளையும் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வாரிய விதி முறைகளுக்கு முரணாக இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து வாரியத்திற்க்கு இழப்பீடு ஏற்படாமல் இருப்பதற்கும், கடையநல்லூர் கோட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்கவும் உத்திரவிட்டார்.மின் நுகர்வோர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு உரிய பதிலை கனிவுடன் தெரிவிக்க அறிவுரை வழங்கினார். பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை காலங்களில் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் திருநெல்வேலி மின் தடை நீக்கும் மையம் தொலைபேசி எண்கள் 9445859032, 9445859033, 9445859034, மற்றும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 தொடர்பு கொண்டு மின்சாரம் சம்பந்தமான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம்.
