
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட 12 வார்டுகளில் உள்ள பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெரும் மக்களோடு முதல்வர் திட்டம் சிறப்பு முகாம் ஜனவரி 3ஆம் தேதி லலிதா சக்கரவர்த்தி திருமண மஹாலில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் பகுதியில் பொதுமக்களிடம் முகாம் தொடர்பான விழிப்புணர்வு நோட்டிஸ் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, நகராட்சி ஆணையர் இளவரசன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயசங்கர், நகராட்சி பொறியாளர் சாம்பசிவம், நகர மன்ற உறுப்பினர்கள் மாலதி இராமலிங்கம், ஜெயந்தி மதியழகன், குமரவேல், செல்வகுமாரி இரமேஷ்பாபு, கோபி மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்