
திருத்தணி முருகன் கோயிலில் இன்று திருப்படி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அறுபடை வீடுகளில் சிறந்த விளங்கும் இவ்வாலயத்தில் டிசம்பர் 31 ஆம் தேதி நடைபெறும் திருப்படி திருவிழா என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆண்டுக்கு 365 நாட்களை குறிக்கும் வகையில் இந்த மலைக் கோயிலுக்கு செல்வதற்கு 365 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. முருக பக்தர்கள் பக்தி பாடல்களை பாடிய வண்ணம் படிக்கட்டுகளின் வழியாக நடந்து சென்று முருகனை தரிசிப்பது தான் திருப்படி திருவிழா என அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் திருத்தணி முருகனுக்கு 63 திருப்புகழ் பாடல்களை இயற்றி பாடியுள்ளார். ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31 ஆம் தேதி 1926ஆம் ஆண்டு வள்ளிமலை சுவாமிகள் என்பவரால் வெறும் 7 பேர் கொண்ட குழுவினரால் இந்த திருப்படி திருவிழா தொடங்கப்பட்டது. பாதசாரிகளாக பக்திசன்மார்க்கம் பரப்பும் வகையில் திருப்புகழ் பாடல்களை பாடி நடந்தே வந்து முதல் படிக்கட்டில் தீபாரதனை நடத்தி. தொடர்ந்து படிக்கட்டுகளின் வழியாக திருப்புகழ் தேவாரம் உள்ளிட்ட முருகன் மீது பக்தி பாடல்களை பாடியவாறு மலைக் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். இது காலப்போக்கில்அதிக அளவில் முருக பக்தர்களை ஈர்த்து பக்தி இசை கன்னிசை கச்சேரிகளாக உருவெடுத்து இன்றளவும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் விழாவாக மலர்ச்சி அடைந்ததுள்ளது. இரவு முழுவதும் விடிய விடிய பக்தி இன்னிசை கச்சேரி குழுவினர்கள் வருகை தந்ததாலும் நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆங்கில புத்தாண்டு என்பதாலும் பக்தர்கள் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம் டிசம்பர் 31ஆம்தேதிகாலை முதல் மறுநாள் ஜனவரி இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும் இடைவிடாமல் பக்தர்கள் சுவாமியை தரிசிக்கலாம். சரவண பொய்கை திருக்குளம் அருகில் இருந்து மலையடி வாரத்தில் இந்த திருப்படி விழாவை இன்று காலையில் கோயில் நிர்வாகம் சார்பாக.தொடங்கப்படுகிறது அனைத்துப் படிகளிலும் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து துவக்குகின்றனர்.தொடர்ந்து திருப்புகழ் பஜனை கோஷ்டியினர் பக்தி பாடல்களை பாடிய வண்ணம் மலையேறி செல்கின்றனர். காலை 11 மணி அளவில் வள்ளி தெய்வயானை சமேதராய் உற்சவர் முருகக்கடவுள்.தேர் வீதியில் வெள்ளி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். நாளை ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு இரவு 9 மணி அளவில் தங்கத்தேர் உற்சவமும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் முதல் முதலாக ஆங்கில புத்தாண்டு தரிசனம் என்பது திருத்தணியில் தான் தொடங்கப்பட்டது. தற்போது அனைத்து ஆலயங்களிளும் நடைபெறுகிறது. இந்த திருப்படி திருவிழா மற்றும் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தி இன்னிசை கச்சேரி குழுவினர் வருகை தந்து திருத்தணி நகர முக்கிய பகுதிகளில் உள்ள சத்திரங்களிலும் மலைக்கோயிலிலும் விடிய விடிய பக்தி இன்னிசை கச்சேரிகளும் .தேவாரம். திருவாசக ஆன்மிக சொற்பொழிவுகளையும் நடத்துகின்றனர். விழா ஏற்பாடுகளை திருக்கோயில் இணைஆணையர்.க. ரமணி. அறங்காவல் குழு தலைவர்.சு. ஸ்ரீதரன். அறங்காவலர்கள்.ஜி. உஷாரவி கோ. மோகனன்.வி. சுரேஷ் பாபு மு.. நாகன் மற்றும் கோயில் அதிகாரிகள் ஊழியர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.