
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தே.மு.தி.க .தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மறைவிற்கு அனைத்துக் கட்சி பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்

திரைப்படத் துறையினர் மற்றும் ரசிகர்களால் கேப்டன் என அழைக்கப்படும் திரைப்பட கதாநாயகர் நடிகர் சங்க தலைவர் தேமுதிக கட்சியின் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என பல்வேறு பொறுப்புகளை திறம்பட கையாண்ட மனிதராக விளங்கியவர் விஜயகாந்த் அவர் தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
இவரின் மறைவை துக்கநிகழ்வாக அனுசரிக்க தேவகோட்டை மக்கள் மற்றும் அனைத்துக் கட்சியினரும் இணைந்து தேவகோட்டை ஒன்றிய அலுவலகத்திற்கு அருகில் இருந்து மௌன ஊர்வலமாக சென்று தியாகிகள் பூங்கா அருகே விஜயகாந்த் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர் இதில் தேவகோட்டை நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் நகர்மன்றத் துணைத் தலைவர் ரமேஷ் ஒன்றிய பெருந்தலைவர் பிர்லா கணேசன் கன்னங்குடி ஒன்றிய பெருந்தலைவர் சரவண மெய்யப்பன் இறகு சேரி குமார் மற்றும் பல மக்கள் பிரதிநிதிகளும் பல்வேறு கட்சியின் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்