
கோவை மாவட்டம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி தலைமையில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாநில பொதுச் செயலாளர் கே.சுந்தரம் கோவை மாவட்ட தலைவர் என்.தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மண்டல பாசன தேவைக்கு பாண்டியாறு, புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் படி ஏரி குளம் குட்டைகளை பாதுகாக்க வேண்டும் விண்ணப்பித்த ஒரு வருடத்திற்குள் பாகுபாடுகள் இன்றி விவசாய மின் இணைப்புகள் வழங்கவேண்டும் உள்ளிட்ட 13அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்தஆர்ப்பாட்டத்தில் மாநகர் தலைவர் ஞானசுந்தரம் மாவட்ட பொதுச்செயலாளர் குனசேகரன் மாவட்ட பொருளாளர் ரங்கநாதன் சூலூர் வட்டார தலைவர் ஜெகநாதன் மற்றும் சங்க நிர்வாகிகள் விவசாயிகள் உட்பட ஏராளமானோர் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.