
மதுரை மத்திய சிறையில் உள்ள தண்டனை சிறைவாசிகளுக்கு பல்வேறு வகையான தொழில் பயிற்சிகள் அவர்கள் சிறையில் உள்ள போதே வழங்கப்பட்டு வருகிறது
அந்த வகையில் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் சிறுதானிய உணவு பொருட்கள் தயார் செய்யப்படும் பயிற்சி வகுப்பு மதுரை மத்திய சிறையில் உள்ள தண்டனை சிறைவாசிகளுக்கு சாஜர் ஹெல்த் எஜுகேஷன் அண்ட் சாரிட்டபிள் டிரஸ்ட் மதுரை மூலம் உதவித்தொகையுடன் 30 நாள் பயிற்சி வகுப்பாக நடைபெறுகிறது
அதன் துவக்க நாளான இன்று மதுரை சரக சிறைத்துறை டிஐஜி திரு பழனி மற்றும் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் திரு சதீஷ்குமார் ஆகியோர் மற்றும் சாஜர் ஹெல்த் எஜுகேஷன் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் ஜாஸ்மின் ராஜ்குமார் மற்றும் நபார்டு வங்கி மேலாளர் திரு சக்தி பாலன் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேத்தி துவக்கி வைத்தனர்
இந்த பயிற்சி வகுப்பில் மதுரை மத்திய சிறை, பெண்கள் தனி சிறை சிறைவாசிகள், தலா 25 பேர் கலந்துகொண்டு பயிற்சி பெறுகின்றனர் இப்ப பயிற்சியின் போது சிறுதானிய மூலம் தயார் செய்யப்படும் இனிப்பு கார வகைகள் உணவு வகைகள் ஆகியவை தயார் செய்யும் முறைகள் மற்றும் சந்தைப்படுத்தும் முறைகள் குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் இவர்கள் மூலம் தயார் செய்யப்படும் சிறுதானிய உணவுப் பொருட்கள் மதுரை மத்திய சிறையில் செயல்பட்டு வரும் சிறை சந்தையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விற்பனைக்கு வைக்கப்படும் என சிறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது