
கோவை மாவட்டம் இந்திய மாயா இயல் பொழுதுபோக்கு சங்கத்தின் சார்பாக 2024-2027ஆண்டிற்கான சங்க நிர்வாகிகள் தேர்வு கோவை சவுரிய பாளையத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாயாஜால நிபுணர்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர். புதிய சங்க நிர்வாகிகளாக தலைவர்நந்தகுமார்,பொதுச் செயலாளர்பிரகாஷ் சவுகூர்,துணைத் தலைவர்அருண்,இணைச் செயலாளர்பத்மநாதன்,பொருளாளர்மிருணாளினி,மக்கள் தொடர்பு அதிகாரி அமர்,நிர்வாகக் குழு உறுப்பினர்கள்,மணிகண்டன்,பரத் சார்ஜன்ட் அட் ஆர்ம்ஸ் சிரில் வினோத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் கெளரவ ஆலோசகர்களாக பாலசுப்ரமணியம், மேரி செல்வம் நியமிக்கபட்டுள்ளனர் .இந்த தேர்தல் ராமலிங்கம் மற்றும் மேரி செல்வம் ஆகியோர் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சியை தொடர்ந்து வெற்றி பெற்ற நிர்வாகிகள் அனைவரும் தங்கள் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தனர்.