
ஏரல் தாலுகா அலுவலகத்தில் பல்வேறு அரசு துறை அதிகாரிகளுக்கான மக்களவைத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் துவங்கப்படும் நிலையில் தேர்தலுக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவின்படி ஏரல் தாலுகா அலுவலகத்தில் பல்வேறு அரசு துறை அதிகாரிகளுக்கான மக்களவைத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஏரல் தாசில்தார் கோபால் தலைமை தாங்கினார். கூட்டத்தில், பொது இடங்களில் அரசியல் கட்சி குறித்த சுவர் விளம்பரங்கள், அடையாள சின்னங்கள், சுவரொட்டிகள், பதாகைகள், டிஜிட்டல் பேனர்கள், படங்கள் குறியீடுகள் ஆகியவற்றை முழுமையாக அழித்திட வேண்டும். கொடிக்கம்பங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் ஆகியவற்றை மூடி மறைத்திட வேண்டும். தேர்தல் நடத்த விதிகளை அமல்படுத்துவதில் விதிமீறல்கள் ஏதும் ஏற்படா வண்ணம் கண்காணிப்பிட வேண்டும் சட்டம் ஒழுங்கினை பாதுகாத்திடவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்து தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்கான நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய், பேரூராட்சி செயல் அலுவலர்கள் சாயர்புரம் மற்றும் பெருங்குளம் பாபு, ஏரல் தனசின் ஆழ்வார் திருநகரி எட்வர்ட் ஜெயசீலன், தென் திருப்பெயரை சேக் அகமது நாசரேத் சந்திரகலா, ஆழ்வார் திருநகரி இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லா பாய், சப் இன்ஸ்பெக்டர்கள் ஏரல் பழனிச்சாமி குரும்பூர் முத்துகிருஷ்ணன் ஸ்ரீவைகுண்டம் அந்தோணி ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.