பெஞ்சல் புயல் மழை காரணமாக திருத்தணி திருவாலங்காடு பள்ளிப்பட்டு ஆர்.கே. பேட்டை உள்ளிட்ட பகுதிகளில்கனமழை பெய்த காரணத்தினால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன மேலும் இந்த பகுதி விவசாயிகளின் நீர் ஆதாரமாக விளங்கும் குசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நிலத்தடி நீர் பெருகும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் அம்ம பள்ளி அணைக்கட்டில் தண்ணீர் நிரம்பி கொள்ளளவு எட்டியதால் நேற்றைய முன்தினம் திங்கட்கிழமை இரவு 11 மணி அளவில் உபரி நீர் செல்வதற்கு அணை திறக்கப்பட்டது வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இந்த தண்ணீர் தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டி ஏரிக்கு சென்றடைகிறது. முதலாவதாக பள்ளிப்பட்டு . குசஸ்தலை ஆற்றில்இந்த வெள்ளப்பெருக்கால் பள்ளிப்பட்டு பகுதியில் 3 கிராமங்களில் ஆற்றின் தலைப்பாலங்கள் மூழ்கி வெள்ளம் பாய்ந்து செல்வதால் சுற்றுப்புற கிராம மக்கள் அன்றாட
தேவகளுக்காக செல்ல முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் நகரி வழியாக செல்லும் இந்த குசஸ்தலைஆறு
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த
என். என். கண்டிகை. லக்ஷ்மாபுரம் .ஆற்காடு குப்பம். திருவள்ளூர் கடந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் சென்றடைகிறது தற்போது பள்ளிப்பட்டு அடுத்த நெடியம் கிராமத்தில் உள்ள குசஸ்தலை ஆற்றின் மீது உள்ள தரை பாலம் தண்ணீரில் மூழ்கி வெள்ளம் சீறிப் பாய்கிறது. இந்த மழை வெள்ளத்தை பார்ப்பதற்கு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பொதுமக்கள் ஆர்வமாக ஆற்றங்கரை மீது கூட்டமாக வருவதை போலீசார் தடுத்து அறிவுரை வழங்கி வருகின்றனர். மேலும் சிலர் ஆபத்தை உணராமல் இரு சக்கர வாகனங்களில் பயணிப்பதையும் தரைப்பாலத்தில் நடந்து செல்வதையும் தடுத்து நிறுத்தும் வகையில் போலீசார் அறிவுரை வழங்கி அனுப்புகின்றனர். மேலும் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்போடு இருக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபு சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார் அபாயகரமாக உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் இறங்கவோ குளிக்கவோ கூடாது எனவும் குசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் யாரும் அதை கடந்து செல்லக்கூடாது எனவும்மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.