இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே எம். புதுக்கோட்டை –  குண்டுகுளம் கிராமத்திற்கும் செல்லும் தரைப்பாலம் முற்றிலும் பழுது பொதுமக்கள், வாகனங்களில் செல்வதில் அச்சம்.

  கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எம்.புதுக்கோட்டை கிராமத்திலிருந்து  குண்டுகுளம் கிராமத்துக்கு செல்லும் தரைப்பாலம் முற்றிலும் பழுதாகி விபத்து ஏற்படுத்தும் சூழ்நிலையில் உள்ளது.  4 கீ.மி தொலைவில் செல்ல வேண்டிய  அனைத்து வாகனங்களும் 23 கீ.மி சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை தொடர்ந்து வருகிறது.  குண்டுகுளம் கிராமத்திலிருந்து அத்தி அவசியமான  தேவைக்காகவும், ரேஷன் பொருள், குடிதண்ணீர், இதர பொருள்கள் வாங்க புதுக்கோட்டை கிராமத்திற்கு இதே சாலையில் தான்  செல்ல வேண்டும்.   குண்டுகுளம்,சொக்கலிங்கபுரம், ஒழுகுபுலி, வண்ணங்குளம் ஆகிய கிராம மக்கள் அவசரத் தேவைக்கு அதிகளவில் பயன்படும் சாலையாக உள்ளது.அதே போல   இராமநாதபுரம் – விருதுநகர் மாவட்டத்திற்கு செல்வதற்கு இந்தவழியாக   விவசாயிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள்  பயன்படுத்தி வருகின்றார்கள் அப்படி இருக்கும் சூழ்நிலைகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக முற்றிலும் சேதமடைந்து,பள்ளமாக உள்ள சாலையை மாவட்ட நிர்வாகமும், கமுதி ஊராட்சி அலுவலகம்,நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்  இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள், சமூக  ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளார்கள். அரசு உடனடியாக தரைப்பாலம் அமைத்து கொடுக்க வேண்டும் என  கோரிக்கை வைத்துள்ளார்கள்.