
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயிலில் பழனிஅருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தைப்பூசத்திற்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு நாளொன்றுக்கு இருபதாயிரம் பக்தர்கள் உணவு அருந்தும் வகையில் மாபெரும் அன்னதானத்தை பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் கே.எம் . சுப்பிரமணியன் தலைமையில், தொடங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் ஜி.ஆர்.பாலசுப்ரமணிம்எஸ். அன்னபூரணி, பாலசுப்ரமணியம் தனசேகர் முன்னிலை வகித்தனர் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் இணை ஆணையர் எஸ். மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேசன், உதவி ஆணையர் லட்சுமி, ஒட்டன்சத்திரம் நகர்மன்ற தலைவர் க.திருமலைசாமி கோவில் துணை கண்காணிப்பாளர்கள் அலுவலர்கள் , பணியாளர்கள் பொதுமக்கள் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் பெருந்திரளானோர்கள் அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.