![IMG_20250205_163026](https://ullatchisaral.com/wp-content/uploads/2025/02/IMG_20250205_163026-1024x473.jpg)
திருவண்ணாமலை தாலுக்கா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் தமிழக அரசை கவனத்தை ஈர்க்கும் வகையில் கிராம உதவியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி 3 கட்ட போராட்டங்களில் 2 ஆம் கட்ட காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு வட்ட தலைவர் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் கஜேந்திரன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் ரவி அனைவரையும் வரவேற்றார்.வட்டக் கிளை நிர்வாகிகள் துணை, இணை , மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த போராட்டத்தில் கிராம உதவியாளர்களை கிராம பணி பார்ப்பதற்காக பணி அமர்த்தபட்டவர்களை கிராம பணியை தவிர பல்வேறு மாற்றுப் பணிகளுக்கு பயன்படுத்தி வருவதை தவிர்க்க வேண்டும். அன்றைய வருவாய் நிர்வாக ஆணையர் போட்ட உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் மாற்றுப் பணிகளுக்கு பயன்படுத்துவதை நிறுத்திட வேண்டும்.புதியதாக பணியில் சேர்ந்த கிராம உதவியாளர்களுக்கு சிபிஎஸ் எண் தற்காலிக வழங்கப்பட்டு ஊதியம் வழங்கப்படுகிறது எனவே சி பி எஸ் எண் நிரந்தரமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் மாநில அமைப்பு செயலாளர் பெருமாள், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர்பார்த்திபன்,தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிணைப்பு மாவட்ட பொருளாளர் ராஜா ,ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி பேசினார்கள்.இந்தப் போராட்டத்தில் மாவட்ட தலைவர் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் ரமணன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ரகுபதி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பரிதிமால் கலைஞன், தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிணைப்பு மாவட்ட செயலாளர் சென்னையன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ஏழுமலை, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட இணை செயலாளர் சிவகுமரன், தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் காவேரி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க வட்டத் தலைவர் முருகன்,தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க காளிமுத்து ,தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கதலைவர் பலராமன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க தலைவர் உத்திரகுமார் ,ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் போராட்ட முடிவில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க வட்ட பொருளாளர் கருணாநிதி நன்றி கூறினார்.