
சென்னை, பிப்ரவரி 2025: இந்தியாவின் முன்னணி வர்த்தக நிறுவனமும், மலபார் கோல்டு & டைமண்ட்ஸின் தாய் நிறுவனமுமான மலபார் குழுமம், 2024–2025 கல்வியாண்டிற்கான தமிழ்நாடடில் மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகைகளை அறிவித்துள்ளது. சென்னை உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பானது, இக்குழுமத்தின் தனித்துவமான சமூகப் பொறுப்பு முயற்சியான மலபார் கல்வி உதவித்தொகை திட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. மகளிருக்கான கல்வியை ஆதரிப்பதில் அதன் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த நிகழ்வை மாண்புமிகு தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார். மலபார் குழுமத்தின் சேர்மேன் திரு. எம் பி அகமது மற்றும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸின் இந்திய ஆப்பரேஷன்ஸ் நிர்வாக இயக்குநர் திரு. அஷர் O, தமிழ்நாடு மண்டல இயக்குனர் திரு. யாசர் கே பி., வடக்கு மண்டல தலைவர் திரு. அமீர் பாபு, மேற்கு மண்டல தலைவர் திரு. நௌஷாத், கிழக்கு மண்டல தலைவர் திரு. சுதீர் முகமத் மற்றும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பணியாளர்கள், வாடிக்கையாளர்கள், நலம் விரும்பிகள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு, இந்தியாவில் கல்வி உதவித்தொகை திட்டம் 21,000-க்கும் மேற்பட்ட மாணவிகளின் கல்வியை ஆதரிப்பதற்காக ₹16 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள 446 அரசு பள்ளியில் பயிலும் 3,511-க்கும் மேற்பட்ட மாணவிகளின் கல்வி
உதவித்தொகையாக மொத்தம் ₹2.80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சி குறித்து மலபார் குழுமத்தின் சேர்மேன் திரு. MP. அகமது அவர்கள் பேசுகையில், “கல்வி என்பது உலகை மாற்றுவதற்கான மிகவும் சக்தி வாய்ந்த கருவியாகும். கல்வி வாய்ப்புகளைத் திறக்கிறது மற்றும் வாழ்க்கையை மாற்றுகிறது என்ற மலபார் குழுமத்தின் ஆழமான நம்பிக்கையின் நேரடிப் பிரதிபலிப்பே எங்களுடைய கல்வி உதவித்தொகைத் திட்டம். கல்வியைப் பெறுவதில் இளம் பெண்களுக்கான தடைகளை நீக்குவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம், இதன் மூலம் அவர்கள் தங்களுடைய கல்விக் கனவுகளை நனவாக்கி, சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க முடியும்” கூறினார்.
மலபார் குழுமம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே அதன் சமூக நலன் சார்ந்த செயல்பாடுகள் மூலம் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான வலுவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி வருகிறது. இந்த முயற்சிகளை கட்டமைக்கவும், விரிவுபடுத்தவும் 1999-ஆம் ஆண்டு, மலபார் சேரிட்டபுள் டிரஸ்ட் (Malabar Charitable Trust) உருவாக்கப்பட்டது. கல்வி, சுகாதாரம், நீடித்த சுற்றுச்சூழல் மற்றும் வறுமை ஒழிப்பு போன்றவற்றின் மூலம், குறிப்பாக விளிம்பு நிலைச் சமூகங்களை மேம்படுத்தும் விதத்தில் CSR முன்முயற்சிகளுக்கு மலபார் குழுமம் அதன் லாபத்தில் 5% ஒதுக்குகிறது.
அத்தகைய CSR கட்டமைப்பின் கீழ் ஒரு முதன்மை முயற்சியாக 2007-ல் தொடங்கப்பட்டதுதான் மலபார் தேசிய உதவித்தொகை திட்டம். இன்று வரை, இந்தியா முழுவதும் 95,000-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ₹60 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 21,500-க்கும் மேற்பட்ட மாணவிகளின் கல்விக்காக ₹13.50 கோடிக்கு ரூபாய்க்கு மேல் பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது. எதிர்கால சந்ததியினர் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தயாராகும் விதத்தில் பெண் கல்வியில் கவனம் செலுத்துவதன் மூலம், மலபார் குழுமம் தனிநபர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கல்வி உதவித்தொகை திட்டத்தோடு, மலபார் குழுமத்தின் பசி-இல்லாத உலகம் திட்டம் நாடு முழுவதும் உள்ள பின்தங்கியவர்களுக்கு சத்தான உணவை வழங்குகிறது. தன்னார்வலர்களின் வலுவான வலையமைப்பு மற்றும் உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடனான கூட்டாளித்துவத்தின் மூலம், இந்த முயற்சி பசியை ஒழிப்பதற்கும், அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உதவுகிறது. தற்போது, இந்தியாவின் 17 மாநிலங்களில் உள்ள 81 நகரங்களில் தினமும் 60,000 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்படுகின்றன. இது மட்டுமல்லாமல், ஜாம்பியாவில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு தினமும் 10,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன. மலபார் குழுமம் 200 மையங்களில் தினமும் 100,000 பேருக்கு சேவை வழங்கும் விதத்தில் திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. சமூக சேவையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் தணல் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பசியில்லா உலகம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஆதரவற்ற பெண்களுக்கு பாதுகாப்பையும் பராமரிப்பையும் வழங்கும் விதத்தில் முழு வசதியும் உள்ள தங்குமிடத்தை வழங்குவதற்காக “கிராண்ட்மா ஹோம்” (Grandma Home) திட்டத்தை மலபார் குழுமம் தொடங்கியுள்ளது. தற்போது இத்தகைய இல்லங்கள் ஹைதராபாத் மற்றும் பெங்களூருவில் செயல்படுகின்றன. இத்திட்டம் விரைவில் கேரளாவில் உள்ள முக்கிய நகரங்களிலும், சென்னை, கொல்கத்தா, டெல்லி மற்றும் மும்பையிலும் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக 12 மாநிலங்களில் 581 நுண்-கற்றல் மையங்களை நாங்கள் நிறுவியுள்ளோம். இன்றைய நிலவரப்படி, நாங்கள் 25,800-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவியிருக்கிறோம்.
பின்தங்கியவர்களுக்கு மருத்துவ உதவி, வீட்டு கட்டுவற்கான ஆதரவு மற்றும் தேவைப்படும் பெண்களின் திருமணங்களுக்கு நிதி உதவி ஆகியவையும் பின்தங்கிய சமூகங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட குழுமத்தின் CSR முன்முயற்சிகளில் அடங்கும். இன்றுவரை, மலபார் குழுமம் பல்வேறு சமூகப் பொறுப்புத் திட்டங்களில் ₹282.29 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது, இது நிலையான வளர்ச்சிக்கான அதன் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
கல்வி மற்றும் பசி நிவாரணம் போன்ற சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முன்முயற்சிகளில் தொடர்ந்து கவனம் செலுத்துவது, சமூகங்களுக்கு அதிகாரமளிக்கப்படும்போதும் சாத்தியமான எல்லா வழிகளிலும் ஆதரிக்கப்படும்போது மட்டுமே நீடித்த வளர்ச்சி சாத்தியமாகும் என்ற மலபார் குழுமத்தின் நம்பிக்கையை எடுத்துக்காட்டுவதாக உள்ளன. குழுமம் தன்னுடைய வர்த்தகம் மற்றும் சமூகப் பொறுப்புகள் இரண்டையும் தொடர்ந்து விரிவுபடுத்துவதால், இந்த அர்ப்பணிப்பு அனைத்து எதிர்கால முயற்சிகளிலும் மையமாக இருக்கும்.
ஆசிரியரின் குறிப்பு:
1999 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மலபார் சேரிட்டபுள் டிரஸ்ட் (MCT) என்பது மலபார் குழும நிறுவனங்களின் CSR பிரிவாகும். இக்குழுமம் தனது இலாபத்தில் 5% வரை CSR மற்றும் மனிதநேய முயற்சிகளுக்கு ஒதுக்குகிறது. MCT நடவடிக்கைகள் நாடு முழுவதும் உள்ள மலபார் குழுமத்தின் முதன்மை நிறுவனமான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் (MGD) ஷோரூம்கள் மூலமாகவும், உள்ளூர் சமூகங்களில் தொண்டாற்றும் அடிமட்ட நிறுவனங்களின் செயல்பாட்டு ஆதரவுடனும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.