
தென் மாவட்டங்களில் அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் இலவச வேலை வாய்ப்பு பயிற்சி மையங்களை தொடங்க வேண்டும் என அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி தேசிய செயலாளர் ஸ்ரீவை சுரேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பொதுமக்களை நேரில் சந்தித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட வருகை தந்த தமிழக முதல்வர் ஸ்டாலினை அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி தேசிய செயலாளர் ஸ்ரீவை சுரேஷ் தலைமையிலான கட்சியினர் நேரில் சந்தித்தனர். முன்னாள் முதல்வர் கலைஞர் எழுதிய இரண்டு புத்தகங்களை ஸ்டாலினிடம் வழங்கிய அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேசிய செயலாளர் ஸ்ரீவை சுரேஷ் கோரிக்கை மனு ஒன்றையும் வழங்கினார்.
அக்கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,
1995 ல் போடப்பட்ட தமிழ்நாடு அரசாணையின் படி கள்ளர், மறவர், அகமுடையார் முக்குலத்தோர் அனைவரையும் தேவர் என அறிவிக்க வேண்டும். 1970 ல் டாக்டர் கலைஞரால் தொடங்ப்பட்டு கமுதி, உசிலம்பட்டி, சங்கரன்கோயிலில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தரம் உயர்த்தி கூடுதல் கட்டிடங்கள், முதுகலை பாடத்திட்டங்கள் கூடுதலாக கொண்டு வரவேண்டும். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சீர்மரபின மக்கள் பயன்பெறும் வகையில் ஸ்ரீவைகுண்டம் நான்குநேரி இடைப்பட்ட இடத்தில் அரசு சார்பில் மறவர் மறுமலர்ச்சி பள்ளி அமைத்திட வேண்டும். 1998 ஆம் ஆண்டு நீதியரசர் ரத்தினவேல் -பாண்டியன் பரிந்துரைகளை ஏற்று அப்போதைய மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறன் அறிவுறுத்தலின் படி அப்போதைய முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரால் அடிக்கல் நாட்டப்பட்டு செயல்படாமல் இருக்கும் தொழில் நுட்ப பூங்காவை செயல்படுத்திட வேண்டும். நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் பூலித்தேவர் மாளிகை என பெயர் வைத்திட வேண்டும். தவறாக பதியப்படும் போலி பிசீஆர் வழக்குகளை தடுத்து நிறுத்துதிட வேண்டும். இந்திய தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையும் நடத்தும் தேர்வுகளுக்கு தென் மாவட்டத்தில் முக்குலத்தோர் மற்றும் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் அமைத்திட வேண்டும். இந்திய விடுதலைப் போராட்டத்தில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆகியோரது பங்களிப்பு முழுவதையும் பாடத்திட்டங்களில் சேர்த்திட வேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அடித்தட்டு மக்களை பாதுகாக்கும் தமிழக முதல்வர் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி தேசிய செயலாளர் ஸ்ரீவை சுரேஷ் தமிழக முதல்வரிடம் வழங்கிய கோரிக்கை மனுவில்,மக்கள் போற்றும் மாபெரும் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞரின் வழியில் அவரது அருந்தவப் புதல்வரான முத்துவேல் கருணாநிதி மு.க.ஸ்டாலின் ஆகிய தாங்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்று சிறப்பான ஆட்சி நடத்துவதுடன் வாழும் மாபெரும் தலைவர்களின் வழியில் பெரியாராக,. அண்ணாவாக.. கலைஞராக ஏழை, எளிய, அடித்தட்டு மக்களின் பாதுகாவலராக சிறப்பான ஆட்சி நடத்தி வருவது கூட்டணி கட்சி என்ற முறையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேசிய செயலாளரான எனது மனதிற்கு மிக மிக மகிழ்ச்சி அளிக்கிறது. எண்ணற்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வரும் தாங்கள் எங்களின் நீண்ட கால கோரிக்கைகளை கருணை கொண்டு நிறைவேற்றி தந்திட பணிந்து வேண்டுகிறோம். என குறிப்பிட்டுள்ளார்.