கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கருந்தலாக்குறிச்சி கிராமத்தில் உள்ள தெற்கு மாரியம்மன் கோவில் தெருவில் 15- வது நிதி குழு மானியத்தில் ,3 -லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மினி போர் மற்றும் டேங்கை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, ஊராட்சி மன்ற தலைவர் அழகுவேல் திறந்து வைத்தார் .இதில் ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் , வார்டு உறுப்பினர்கள், ஜீவிதா முருகவேல், அருணாச்சலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.