
இராமநாதபுரம் அருகே சொகுசு கார் – அரசு பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் கான்ட்ராக்டர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு நேற்று காலை 9:15 மணிக்கு கிளம்பிய அரசு பேருந்து புத்தேந்தல் பகுதியில் 9:30 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது மதுரையிலிருந்து ராமநாதபுரம் வந்த சொகுசு காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் காரில் பயணம் செய்த விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிக்கு வந்த கான்ட்ராக்டர், பணியாளர்கள் ராதாகிருஷ்ணன் குத்தாலிங்கம், சின்ன முனியாண்டி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் படுகாயமடைந்த கருமலை (35) ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்திற்கான காரணம் குறித்து ராமநாதபுரம் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.