
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மலேசியா நாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார்
கண்ணங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பில் பயிலும் மாணவி செ. எப்சிபா தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட சிறார் திரைப்படம்,- திரைக்கதை விமர்சனம் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று தமிழக அரசின் சார்பில் சர்வதேச கல்வி சுற்றுலாவாக மலேசிய நாட்டிற்கு 23-02-2025 முதல், 28-2-2025 வரை செல்ல இருக்கிறார் அரசு பள்ளி மாணவிக்கு பெற்றோர்கள் தலைமையாசிரியர் ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் முன்னாள் மாணவர்கள் மற்றும் பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.