
ஈச்சனாரி இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி துறை சார்பில் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வில்தமிழ்நாடு செய்தித் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பங்கேற்று,குத்துவிளக்கு ஏற்றி வைத்து,விழாப் பேருரையாற்றினார்.தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அவ்வை அருள், தமிழ் வளர்ச்சித் துறை அரசு செயலாளர் இராஜா ராமன்,கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பவனார்,கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் , தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன்,வடக்கு மாவட்டச் செயலாளர் தொஅ ரவி,மேயர் இரங்கநாயகி இராமச்சந்திரன்,புலவர் செந்தலை கவுதமன், கவிதாயினி ஆண்டாள் பிரியதர்ஷினி,தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தமிழ் ஆர்வலர்கள், ஆசிரியர், ஆசிரியைகள்,மாணவ மாணவிகள், கலந்து கொண்டனர்.