
மதுரையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி வந்த அரசு பேருந்தில் பெண் பயணி ஒருவர் பயணித்தார். அவர் அந்த பேருந்தில் தன்னுடைய பையுடன் இரண்டு பவுன் நகையை தவற விட்டு ஆரல்வாய் மொழி பேருந்து நிலையத்தில் இறங்கி விட்டார். உடனே சுதாரித்துக் கொண்டு பின்னால் வந்த திருநெல்வேலி பேருந்து ஓட்டுநர் விஜயகுமார் என்பவரிடம் தகவலை கூறினார். அவர் உடனே வடசேரி பேருந்து நிலைய மேலாளர் மகாதேவன் என்பவரிடம் தகவலை தெரிவித்தார். உடனே தகவலை அறிந்த மகாதேவன் பேருந்து நிலையம் வந்தடைந்த மார்த்தாண்டம் பேருந்தை ஆய்வு செய்து நகையை மீட்டு பெண் பயணியிடம் நகையை ஒப்படைத்தார். நகையை பெற்றுக் கொண்ட பயணி ஓட்டுனருக்கு நன்றியை தெரிவித்தார் . மேலும் துரிதமாக செயல்பட்டு நகையை மீட்க உதவியை ஓட்டுனரை அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்