
சென்னை, மார்ச் 2025: உறக்க ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்துவதற்காக வானகரத்தைச் சேர்ந்த அப்போலோ ஸ்பெசாலிட்டி மருத்துவமனை இந்தியாவின் முதல் உறக்க ஆரோக்கிய மனிதச் சங்கிலியை இன்று தொடங்கியுள்ளது. இந்தச் சிறப்பான முன்னெடுப்பை இந்த ஆண்டின் உலக உறக்க நாளன்று தொடங்கியுள்ளனர். “உறக்க ஆரோக்கியமே முதன்மையாக கவனிக்க வேண்டியது” என்ற உள்ளடக்கத்தைக் கொண்டு மருத்துவர்கள், தாதியர்கள், மாணவர்களைக் கொண்டு உறக்கம் தொடர்பான பொன்மொழிகள் எழுதப்பட்ட தலையணைகளைக் கொண்டு இந்த மனிதச் சங்கிலியை அமைக்கவுள்ளனர்.
இந்தியாவில் 60% பேர் முழுமையான உறக்கமில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த உறக்க மனிதச் சங்கிலி வழியாக உறக்கம் என்பது ஆடம்பரம் அல்ல, உயிரியல் தேவை என்பது சக்திவாய்ந்த வகையில் நினைவூட்டுவதே நோக்கம். மோசமான உறக்கம் என்பது இதய நோய், நீரிழிவு, எதிர்ப்பு சக்தி குறைபாடு, மன நலக் குறைபாடுகளோடு தொடர்புடையது. சரியாக உறங்கும் நேரத்தை திட்டமிடுவது, மொபைல் போன்கள், தொலைக்காட்சியில் அதிக நேரத்தைச் செலவிடாமல் இருப்பது, மருத்துவர் உதவியைத் தேவைப்படும்போது நாடுவது தொடர்பான விழிப்புணர்வை இந்த உறக்க மனிதச் சங்கிலி இயக்கம் மூலம் பரப்புகிறோம்.
துறைத்தலைவர் மற்றும் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்லீப் ஹெல்த் பிரிவின் க்ளினிக் ஹெட் டாக்டர். திரு. கார்த்திக் மாதேஷ் கூறும்போது, “உறக்கம் என்பது ஆரோக்கியத்தின் அடித்தளம். ஆனாலும் அதன் முக்கியத்துவம் நம்மிடம் பெரிதாக இல்லை. அப்போலோ ஸ்பெசாலிட்டி மருத்துவமனை முன்னெடுக்கும் உறக்க மனிதச் சங்கிலி போன்ற முயற்சிகள், உறக்கம் என்பது வெறுமனே வாழ்க்கைத் தேவை சார்ந்த தேர்வு என்பதையும் தாண்டி உயிரியல் தேவை என்பதை வலியுறுத்துகின்றன. உறக்க குறைபாடுகள் தொடர்பான விழிப்புணர்வை எழுப்பி, ஆரோக்கியமான தூக்கத்துக்கான வழிமுறைகளை முன்னெடுப்பதன் மூலம் நாம் ஆரோக்கியமான சமூகத்துக்குப் பங்களிப்பு எசய்யலாம். இந்த முயற்சியை முன்னெடுக்கும் அப்போலோ ஸ்பெசாலிட்டில் மருத்துவமனையின் உறுதிப்பாட்டை நான் பாராட்டுகிறேன். ஏனெனில் சமூக நலனுக்கு முக்கியமானது. சமூகங்களுக்கிடையே உறக்க ஆரோக்கியத்தை முன்னேற்றும் முயற்சிகளை எடுப்பதற்காக அப்போலோ ஸ்பெசாலிட்டி மருத்துவமனைக்கு வாழ்த்துகள்.
துறைத்தலைவர் மற்றும் மூத்த நரம்பியல் மருத்துவ ஆலோசகர் டாக்டர் திரு. பிரபாஷ் பிரபாகரன், கூறும்போது, “பொதுமக்களுக்கு ஆரோக்கியமான உறக்கம் பொது ஆரோக்கியத்துக்கு எவ்வளவு அவசியமானது என்பதை அறிவுறுத்தும் வழியாக இந்த உறக்க மனிதச் சங்கிலி நடவடிக்கை உள்ளது. உணவும் உடற்பயிற்சியும் உடம்புக்கு எத்தனை அவசியமோ அதேபோல உறக்கமும் அவசியமானது. உறக்க ஆரோக்கியத்தை முன்னேற்றுவதற்கான இந்த உறக்க மனிதச் சங்கிலி ஒற்றுமையையும் கூட்டுப் பொறுப்பையும் அடையாளப்படுத்துகிறது. சரியான வாழ்க்கை முறை சார்ந்த மாறுதல்களை ஏற்படுத்துவதன் அவசியத்தை இந்த மனிதச் சங்கிலி இயக்கம் வலியுறுத்துகிறது. இதன்மூலம் உங்கள் உறக்க ஆரோக்கியம் மேம்பட்டு அதன்மூலம் சமூகத்திலும் நேர்மறையான விளைவுகள் ஏற்படுத்தவும் இந்த விழிப்புணர்வு மனிதச் சங்கிலி உதவட்டும்.”
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிபுணர்கள் கமாண்டர் மருத்துவர். கார்த்திக் மாதேஷ், நரம்பியல் மருத்துவப் பிரிவின் துறைத் தலைவர் மருத்துவர். பிரபாஸ் பிரபாகரன், நுரையீல் துறை மருத்துவ ஆலோசகர் திரு. மோகனகிருஷ்ணன், தலைமை விருந்தினராக போலீஸ் கமிஷனர் திரு. சங்கர் [Commander Dr. Karthik Madesh, Dr. Prabash Prabhakaran – HOD & Senior Consultant, Neurology and Dr. Mohanakrishnan – Consultant, Pulmonology. Shankar, IPS, Commissioner of Police] ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போலோ ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் உறக்க ஆரோக்கியத்துக்கான ஆய்வுப் பிரிவும் இயங்குகிறது. தூக்கமின்மை, தூக்க குறைபாடு, துயில் மயக்க நோய் ஆகியவற்றை கண்டறிந்து சிகிச்சை புரிவதற்கெனவே உருவாக்கப்பட்ட மையம் இது. நரம்பியல், நுரையீரலியல், கண், மூக்கு, தொண்டை நிபுணர்கள், இதயநோய் பிரிவுகளைச் சேர்ந்த நிபுணர்கள் குழு மேம்பட்ட உறக்க குறைபாடுகளை ஆராய்ந்து வருகிறது. உறக்க குறைபாட்டை இனம்காணும் நவீன நோயறி கருவிகளையும் இந்த மையம் கொண்டுள்ளது. அருமையான மருத்துவ நிபுணர்கள், நவீன கருவிகளைக் கொண்டு இந்த ஆய்வு நிறுவனம் ஆரோக்கியமான உறக்கத்தைத் திரும்ப நோயாளிகள் பெறுவதற்கு உதவுகிறது. இதன்மூலம் பொது ஆரோக்கியம், வாழ்க்கைத் தரம் மேம்பட அப்போலோ ஸ்பெசாலிட்டி மருத்துவமனை உதவுகிறது.