
காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 70 வயது முதிர்ந்த ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்,.
ஓய்வு பெற்ற காவல் துறையினர் இறப்பு ஏற்படும் போது ரூபாய் 150 பிடித்தம் செய்து ரூபாய் 50,000 வழங்குவதை
2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்,
ஓய்வு பெற்ற காவல் துறையினருக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் கீழ் சிகிச்சை பெற உடனடியாக புகைப்படத்துடன் கூடிய காப்பீடு அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நல சங்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஓய்வு பெற்ற காவலர்கள் கலந்து கொண்டனர்