சென்னை, செப். கற்பித்தல், கற்றல் வடிவமைப்பு மற்றும்வகுப்பறைகளுக்கான புதிய கண்டுபிடிப்புகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவமிக்க கல்வி ஆராய்ச்சிஅமைப்பான கிரிசாலிஸ் நிறுவனம், பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை மேம்படுத்தும் வகையில்அடுத்த தலைமுறைக்கான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாக கிரிசாலிஸ் ஏஐ என்னும் தொழில்நுடுபத்தை இன்று அறிமுகப்படுத்தியது.
“திருத்தங்களிலிருந்து இணைப்புகள் வரை” என்ற தலைப்பில் நடந்த இந்நிகழ்ச்சியில், பள்ளிகள் பாரம்பரிய செயல்திறன்கண்காணிப்பிலிருந்து ஒவ்வொரு குழந்தையின் திறனையும்உண்மையிலேயே புரிந்துகொள்ளும் முழுமையான, தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் பயணங்களுக்கு மாற வேண்டியஅவசரத் தேவை குறித்து இதில் கூறப்பட்டது.
கடந்த 2001-ம் ஆண்டு சித்ரா ரவி அவர்களால் துவக்கப்பட்ட கிரிசாலிஸ் இந்தியாவில் 2,000க்கும் மேற்பட்ட பள்ளிகளுடன்இணைந்து பணியாற்றி வருவதோடு, சிங்கப்பூர் மற்றும் பல்வேறுஆப்பிரிக்க நாடுகள் உட்பட 8 நாடுகளில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி உள்ளது.
இந்த நிலையில் ஒவ்வொரு குழந்தையிடமும் உள்ள திறமையைமேம்படுத்தும் வகையில் கிரிசாலிஸ் ஏஐ ஒரு மாற்றத்தை ஏற்படுத்த இருக்கிறது. ஆசிரியர்கள் கற்பித்தல் திறனை வளர்த்துக் கொள்ளவும், மாணவர் வளர்ச்சியை ஆதரிக்கவும், வீடு-பள்ளிஉறவுகளை மேம்படுத்தவும் உதவும் வகையில் இது உருவாக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து கிரிசாலிஸ் நிறுவனம் மற்றும் தலைமை செயல் அதிகாரி சித்ரா ரவி கூறுகையில், ஒவ்வொரு மாணவனின் மதிப்பீடு என்பது பெரும்பாலும் அறிக்கை அட்டைகளின் வாயிலாக சுருங்கி விடுகின்றன. அவை குழந்தையின் கற்றல் பயணத்தின்வளர்ச்சிக்கு தடையை ஏற்படுத்துகிறது. கிரிசாலிஸ் ஏஐ தவறானகருத்துக்கள், சிந்தனை செயல்முறைகள் மற்றும் உணர்ச்சிபூர்வமான வளர்ச்சியைக் கண்டறிய மதிப்பெண்களுக்கு அப்பால்செல்கிறது. இது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒவ்வொருகுழந்தையையும் முழு கற்பவராகவும், அறிவாற்றல், சமூக மற்றும்மெட்டா-அறிவாற்றல் பரிமாணங்களில் வளர்ச்சியடையும் திறன்கொண்டவராகவும் பார்க்க உதவுகிறது, எங்கள் குறிக்கோள்ஆசிரியர்களை மாற்றுவது அல்ல, அவர்களின் கற்பித்தல் திறமை மேம்படுத்துவதாகும். எங்களின் இந்த
முயற்சியின் மூலம் ஒவ்வொரு குழந்தைக்கும் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதாகும் என்று தெரிவித்தார்.
இந்தியாவின் கல்வித் துறை உலகின் மிகப்பெரிய மற்றும்வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாகும். 15 லட்சத்துக்கும் அதிகமான பள்ளிகளில், 1 முதல் 12 ஆம் வகுப்புவரை சுமார் 26 கோடி மாணவர்கள் சேருகின்றனர், மற்றும்ஆண்டுதோறும் சுமார் 2 கோடியே 50 லட்சம் மாணவர்கள் பட்டம்பெறுகின்றனர். அவர்கள் இருவேறு விதமாக சிபிஎஸ்இ மற்றும்மாநில கல்வி பாடத் திட்டங்களில் படிக்கின்றனர். நாடு முழுவதும்28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளன.டிஜிட்டல் கற்றல், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கற்பித்தல்சீர்திருத்தங்கள் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய கல்வித்துறைக்கு செலவிடப்படும் தொகையானது 225 பில்லியன்அமெரிக்க டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், குறிப்பாக பின்தங்கிய சமூகங்களுக்கு சேவைசெய்யும் அரசு மற்றும் குறைந்த கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளில் கல்வியின் தரம் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட கற்றல்ஆகியவை இன்னும் கவலைக்கு உரியதாகவே உள்ளன.
இந்தப் பின்னணியில், கற்றல் இடைவெளிகளைக் குறைக்கவும், கல்வியை மேம்படுத்தவும், கல்வியை ஊக்குவிக்கவும், கிரிசாலிஸ்ஏஐ ஆராய்ச்சி சார்ந்த தீர்வை வழங்குகிறது.
கிரிசாலிஸ் ஏஐ சிறப்புகள்:
மாணவர்களுக்கு:
• தங்களது பலம் மற்றும் முன்னேற்றத்திற்கான பகுதிகள் பற்றியநிகழ்நேர நுண்ணறிவு.
• சுயமாக செயல்படுவதற்கான கற்றலை வளர்ப்பதற்கானதனிப்பயனாக்கப்பட்ட கருத்து.
ஆசிரியர்களுக்கு:
• ஒவ்வொரு குழந்தைக்கும் விரிவான முறையில் கற்பித்தல்.
• சான்றுகள் சார்ந்த பரிந்துரைகள்.
பெற்றோருக்கு:
• தங்கள் குழந்தைகளுக்கு உள்ள பிரச்சினைகளை அடையாளம் காணுதல்.
• வீட்டில் கற்றலை ஆதரிப்பதற்கான நடைமுறை பரிந்துரைகள்.
அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு கல்வி
அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவிலான கல்வியை இலவசமாக வழங்கும் வகையில் ஏஐ சமர்த் என்னும் திட்டத்தை கிரிசாலிஸ் அறிவித்துள்ளது.
சென்ட்ரல் ஸ்கொயர் பவுண்டேஷன் மற்றும் ஐஐடி மெட்ராஸ்ஆகியவற்றுடன் இணைந்து, வாத்வானி ஸ்கூல் ஆப் டேட்டாசயின்ஸ் மற்றும் ஏஐ-ஆல்
உருவாக்கப்பட்டுள்ள ஏஐ சமர்த் திட்டம், அரசு மற்றும் குறைந்த கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 50 லட்சம் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களை இலக்காகக்கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த பாடத்திட்டம் நடுத்தர மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு கொள்கைகள், அதன்நெறிமுறை தாக்கங்கள் மற்றும் நிஜ உலக பயன்பாடுகள் குறித்து விளக்குகிறது. எதிர்காலத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை செயற்கை நுண்ணறிவு மூலம் தீர்ப்பது குறித்தும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாற்றத்தை ஏற்படுத்தும் தொலைநோக்கு பார்வை
கற்பித்தலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த மாநில அரசுகள், பள்ளிகள் மற்றும் கல்வியாளர்களுடன் கிரிசாலிஸ் தொடர்ந்துஇணைந்து பணியாற்றி வருகிறது. அதற்கு கிரிசாலிஸ் ஏஐ அறிமுகம் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது –கல்வி கற்கும் மாணவர்களின் பயணத்தை மேம்படுத்தும் வகையில் தொழில்நுட்பம், கற்பித்தல் ஆகியவை ஒருங்கிணைக்கின்றன.
